Lawrence Salary – ருத்ரன் படத்துக்கு லாரன்ஸ் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: Lawrence Salary (லாரன்ஸ் சம்பளம்) ருத்ரன் படத்துக்கு நடிகர் லாரன்ஸ் பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

க்ரூப் டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் பணியாற்றிக்கொண்டிருந்த லாரன்ஸின் நடன திறமையை பார்த்து ரஜினிகாந்த் அவரை நடன பள்ளியில் சேர்த்துவிட்டார். அதனையடுத்து பல பாடல்களில் க்ரூப் டான்ஸராக நடனத்தில் பின்னியெடுத்தார் லாரன்ஸ். சிரஞ்சீவி நடித்த ஹிட்லர் படத்தின் மூலம் நடன அமைப்பாளராகும் வாய்ப்பு லாரன்ஸுக்கு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர்.

நடிகர், இயக்குநர்: இதனையடுத்து சில பாடல்களில் தோன்றி நடனம் ஆடிய லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து காஞ்சனா சீரிஸை இயக்கிய அவருக்கு காஞ்சனாவும், காஞ்சனா 2வும் மெகா ஹிட்டை கொடுத்தது.

4 வருடங்களுக்கு பிறகு: லாரன்ஸ் கடைசியாக காஞ்சனா 3 படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அவருக்கு பலத்த அடியை கொடுத்தது. தற்போது அவர் ருத்ரன் படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஆடுகளம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்த கதிரேசன் இயக்கியிருக்கும் இந்தப் படமானது முதலில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

படத்துக்கு தடை: ஆனால் இப்போது படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் எனும் நிறுவனம் பெற்றிருந்தது. 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்த நிலையில் 10 கோடி ரூபாயை கொடுத்ததகாவும், ஆனால் தயாரிப்பு தரப்பு மேற்கொண்டு நான்கு கோடி ரூபாய் கேட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகவும் தெரிகிறது,

Raghava Lawrence got 15 Crores Salary for rudhran Movie

இதனையடுத்து ரெவன்ஸா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 24ஆம் தேதிவரை ருத்ரன் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

சம்பளம்: இந்நிலையில் ருத்ரன் படத்துக்கு லாரன்ஸ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி லாரன்ஸ் இந்தப் படத்துக்காக 15 கோடி ரூபாய் சம்பளமாகவும், ப்ரியா பவானி சங்கர் ஒரு கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதேசமயம் ப்ரியா பவானி சங்கர் பத்து தல படத்துக்காக 70 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.