Realme Narzo N55 10,999 ரூபாயில் அறிமுகம்! ஆப்பிள் ஐபோனில் இருக்கும் முக்கிய வசதி இதில் இருக்கு….

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்தியாவில் பட்ஜெட் விலையில் Realme நிறுவனம் அதன் புதிய Narzo Series போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. Narzo N55 என்ற இந்த போன் Mediatek Helio G88 SoC சிப் மற்றும் 64MP கேமரா வசதி கொண்டுள்ளது. இதன் விற்பனை வரும் ஏப்ரல் 18 முதல் Amazon ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

​டிஸ்பிளே வசதிகள்இதில் ஒரு 6.72 இன்ச் முழு HD+ டிஸ்பிளே வசதி உள்ளது. இதன் ஸ்க்ரீன் 90HZ Refresh rate கொண்டுள்ளது. இதனால் நாம் கேமிங் செய்ய ஒரு சிறந்த போனாக இருக்கும். இதன் டிசைன் மிகவும் மெலிதாக 7.89 mm அளவு மட்டுமே உள்ள ஸ்லிம் போனாக இருக்கிறது. இதில் 91.4% ஸ்க்ரீன் ரேஷியோ அளவு, 680 நிட்ஸ் பிரைட்னஸ் அளவு, 16.7மில்லியன் கலர்கள் உள்ள திரை, பஞ்ச் ஹோல் டிஸ்பிளே டிசைன் போன்றவை உள்ளன.
​கேமரா அம்சங்கள்மிகப்பெரிய வசதியாக 64MP முக்கிய கேமரா இதற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் செக்மென்ட்டிலேயே சிறந்த கேமரா உள்ள போனாக இது மாறியுள்ளது. இதன் முன்பக்கம் 8MP செல்பி கேமரா வசதியும் உள்ளது.
பேட்டரி வசதிகள்இந்த ஸ்மார்ட்போனில் ஒரு மிகப்பெரிய 5000mAh பேட்டரி வசதி, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது. இது இந்த செக்மென்ட்டிலேயே மிகவும் அதிவேகமாக சார்ஜிங் வசதி ஆகும். இதன் மூலம் நாம் சார்ஜிங் செய்தால் 50% சார்ஜிங் வெறும் 29 நிமிடங்களில் அடைந்துவிடும்.
திறன் வசதிகள்இதை வேகமாக இயங்கவைக்க இதில் Mediatek Helio G88 சிப் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4GB மற்றும் 6GB RAM ஆப்ஷன்கள் இருந்தாலும் இதை நாம் மேலும் 6GB வரை Dynamic Memory மூலம் அதிகரித்துக்கொள்ளலாம். இதில் சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட், 3 சிம் கார்டு ஸ்லாட் வசதிகள், DIRAC அல்ட்ரா பூம் ஸ்பீக்கர் போன்ற வசதிகள் உள்ளன.
Mini Capsule என்றால் என்ன?நாம் விலை உயர்ந்த பிரீமியம் ஐபோன்களில் ‘Dynamic Island’ என்ற வசதியை பற்றி கேட்டிருப்போம். அதாவது நமது போனில் இருக்கும் Notch என்பது நமக்கு பல விவரங்களை காட்டும் நோட்டிபிகேஷன் கருவி போல வேலை செய்யும்.
இந்த வசதியை வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் இந்த போனில் Realme வழங்கியுள்ளது. இதில் நமது போனின் பேட்டரி அளவு விவரம், டேட்டா பயன்பாடு, தினமும் நாம் நடந்த தூரம் போன்ற அனைத்து முக்கியமான விவரங்களையும் காட்டும். இந்த வசதி இப்போது கிடைக்காது. இதன் OTA அப்டேட் உடன் Mini Capsule வசதி பயனர்களுக்கு கிடைக்கும் என்று Realme உறுதியளித்துள்ளது.
விலை விவரம் (Realme Narzo N55 Price)இந்த ஸ்மார்ட்போன் 4GB + 64GB ஸ்டோரேஜ் மற்றும் 6GB + 128GB ஸ்டோரேஜ் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 4GB RAM மாடல் விலை 10,999 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் Flash Sale ஏப்ரல் 13, 2023 முதலும், First Sale ஏப்ரல் 18, 2023 முதல் தொடங்குகிறது.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.