தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023: சினிமா பிரபலங்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து… தெறிக்கும் டிவிட்டர்!

சித்திரை மாதம் முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு தமிழ் மொழி பேசும் மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு நாளில் மக்கள் வீடுகளில் சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர். கோவில்களுக்கு சென்றும் சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர்.

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.

பிறந்துள்ள இந்த புதிய ஆண்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர்
கமல்ஹாசன்
பதிவிட்டுள்ள டிவிட்டில், உலகம் முழுக்கப் பரவி வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் மகிழ்வான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டும் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

அதில், பாகுபாடு, உயர்வு தாழ்வு கூடாது என்பதைத் தம் கொள்கைகளின் அடிநாதமாகக் கொண்டு அந்தக் குறிக்கோளை எட்டுவதற்கான வேலைகளை ஆழமாகவும் அகலமாகவும் செய்து வைத்துவிட்டுப் போயிருக்கும் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த நாளில் அன்னாரின் பாதையில் நடக்க உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்தில், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த, சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்! என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் நடிகர் தனுஷ், நடிகை லட்சுமி மேனன் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதேபோல் நடிகர் ராகவா லாரான்ஸும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இன்று ருத்ரன் படம் வெளியாவதையும் குறிப்பிட்டுள்ள ராகவா லாரன்ஸ் அனைவரும் படத்தை திரையரங்கில் பாருங்கள், உங்களின் ஆசீர்வாதம் தேவை என குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், பரத்வாஜ் உள்ளிட்டோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பரத்வாஜ் அஜித்தின் திருப்பதி படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.