சென்னை: விஜய் டிவி மூலம் பிரபலமான ரோபோ சங்கர் தற்போது திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்னர் உடல் மெலிந்த நிலையில், ரோபோ சங்கரின் புகைப்படம் வெளியாகியிருந்தது.
அதன்பின்னர் ரோபோ சங்கரின் மனைவி அவரது உடல் எடை குறைந்ததற்கான காரணம் குறித்து விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது வெளியான புகைப்படத்தில் ரோபோ சங்கர் மேலும் மெலிந்து காணப்படுவது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ரோபோ சங்கரின் லேட்டஸ்ட் போட்டோ:விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் 1 போன்ற ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் திரையுலகிலும் அடியெடுத்து வைத்த ரோபோ சங்கர், அஜித், விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ரோபோ ஷங்கரின் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த போட்டோவில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து ரொம்பவே ஒல்லியாக காணப்பட்டார். எப்போதுமே நல்ல வெயிட்டாக இருக்கும் ரோபோ சங்கர், திடீரென உடல் மெலிந்து இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் அவரின் முகமும் மிக மோசமாக வாடிய நிலையில் காணப்பட்டது. இதனால், ரோபோ சங்கருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இதனையடுத்து இதுகுறித்து ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா விளக்கம் கொடுத்திருந்தார். அதில் ரோபோ சங்கருக்கு எந்த நோயும் இல்லை, ஒரு படத்தில் நடிப்பதற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளதாகக் கூறியிருந்தார். இதனால் ரோபோ சங்கரின் ரசிகர்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதேநேரம் அவர் முன்பு போல பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவும் இல்லை.
இந்நிலையில் இன்று வெளியான ரோபோ சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். அதில் ரோபோ சங்கர் மேலும் உடல் எடை குறைந்து மிக சோர்வாக காணப்படுகிறார்.

படத்திற்காக உடல் எடையை குறைத்த ரோபோ சங்கர், நாளுக்கு நாள் இன்னும் மோசமாக மெலிந்து காணப்படுகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், ரோபோ சங்கரின் முகமும் வாடிப் போயுள்ளது. படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் உடல் எடையை குறைப்பது வழக்கமானது தான். ஆனால், ரோபோ சங்கர் உடல் எடை குறைந்துள்ளது பலருக்கும் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது.