ஆர்எஸ்எஸ்-னா என்னன்னு தெரியுமா.? – பாடம் எடுக்கும் அண்ணாமலை.!

தமிழ்நாட்டில் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

பிறப்பில் உயர்வு தாழ்வு உண்டு, பெண்களுக்கு கணவனை பராமரிப்பது தான் உண்மையான வேலை உள்ளிட்ட சனாதன கோட்பாடுகளை நிறுவ தொடங்கப்பட்ட அமைப்பு தான் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் எனும் ஆர்எஸ்எஸ் அமைப்பு. கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அமைப்பு இயங்கி வருகிறது. காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே இந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினராவார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் அதன் கிளை அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தள், சனாதன் சாஸ்தா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் மீது பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உள்ளது. மேற்கூறிய அமைப்புகளில் ஒருவராக இருந்து பின், மத்திய பிரதேச பாஜக எம்பியாக இருக்கும் பிரக்யா சிங் தாக்கூர் மீது மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு உள்ளது. அதேபோல் சமீபத்தில் கேரளாவில் வீட்டில் வைத்து வெடி குண்டு தயாரித்த ஆர்எஸ்எஸ் நபர், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ், கல்புர்கி ஆகியோர்களை கொன்ற வழக்கில் இந்த்துவ அமைப்பினர் விசாரணையில் இருந்தனர். இப்படியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்துவதற்கு, தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அனுமதி மறுத்தது. அதையடுத்து ஆர்எஸ்எஸ் உயர்நீதிமன்றத்தை நாடியது. அங்கு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த நிலையில், ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த கடந்த 11ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தசூழலில் தமிழ்நாட்டில் இன்று 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. 3 கி.மீ தூரம் வரை இந்த ஊர்வலம் நடைபெற்று முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகிலும், தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை காசாங்குளம் பகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் நாகராஜா திடல் பகுதியிலும், திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலையில் இருந்தும், மதுரை மாவட்டம் திருமங்கலம் புறநகர் பேருந்து நிலையம் அருகிலும், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரிலும் என மொத்தம் 45 இடங்களில் ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், ‘‘1925 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இயக்கம், இன்னும் இரண்டு ஆண்டுகளில் 100வது ஆண்டு நிறுவன நாளை கொண்டாடவிருக்கும் இயக்கம், இந்தியா முழுவதும் அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ சேவையாற்றி வரும் இயக்கம்.

பேரிடர் நேரத்தில் களத்தில் நின்று மக்கள் சேவையாற்றும் இயக்கம், யாரும் செல்ல தயங்கும் பகுதிகளுக்கு சென்று அம்மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து தேசிய சிந்தனையை விதைத்த இயக்கம். சமத்துவத்தை முன்னிறுத்தி, நமது தேச நலன் காக்கும் RSS இயக்கத்தின் பிரம்மாண்ட பேரணி, அனைத்து தடைகளையும் ஆளும் திமுகவின் அச்சுறுத்தலையும் மீறி, தமிழகத்தில் 45 இடங்களில் இன்று நடைபெறவிருக்கிறது. பாரத அன்னையின் புகழ் ஓங்குக!’’ என்று தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் பிரிவு தான் பாஜக என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.