கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகை.. தரதரவென இழுத்துச் சென்ற கணவர்.. திட்டித் தீர்த்த ரசிகர்கள்!

மும்பை: சிலம்பாட்டம் படத்தில் செம ஹாட்டான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட சனா கானா திருமணத்துக்கு பிறகு புர்கா உடையில் இப்படி ஆளே மாறிவிட்டாரே என ரசிகர்கள் ஒரு பக்கம் ஷாக் ஆகி வந்த நிலையில், அவரது கணவர் பொதுவெளியில் பண்ண அந்த விஷயம் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

2005ல் இந்தியில் வெளியான எஹி ஹாய் ஹை சொசைட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சனா கான். அதற்கு அடுத்த ஆண்டே தமிழில் ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான ஈ படத்தில் ஐட்டம் பாடலில் ஆட்டம் போட்டு கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.

உடனடியாக சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் 2008ல் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு சனா கானுக்கு கிடைத்தது.

சிலம்பாட்டம் ஹீரோயின்: பஞ்சாமிருதத்தை எடுத்து சிம்புவின் பாடியில் தடவு தடவுன்னு தடவி நடித்தாரே சனா கான் அவர் தற்போது திருமணமாகி எப்படி இருக்கிறார் பாருங்க என சமீபத்தில் கணவருடன் அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

நலம்தானா பாடலுக்கு கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட சனா கானா இது கடைசியாக விஷாலின் அயோக்யா படத்தில் கூட வேறலெவல் பாடலுக்கு வேறலெவலில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தாரே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Did Sana Khan husband tortured her in public? actress explanation is here

தொழிலதிபருடன் திருமணம்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வந்த சனா கான் முப்தி அனஸ் சையத் எனும் தொழிலதிபரை கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டு விட்ட சனா கான் தனது கணவர் பிசினஸை கவனித்து வருவதாக கூறுகின்றனர். மேலும், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்துள்ளார் சனா கான்.

அதிர்ச்சி வீடியோ: சமீபத்தில் மும்பையில் நடந்த இப்தார் விருந்தில் தனது கணவருடன் சனா கான் கலந்து கொண்டார். அப்போது திடீரென நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து தனது மனைவியை தரதரவென சனா கானின் கணவர் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Did Sana Khan husband tortured her in public? actress explanation is here

சனா கானை இப்படியா பொதுவெளியில் அவரது கணவர் கொடுமைப்படுத்துவார் என்றும் கர்ப்பவதியாக இருக்கும் பெண்ணை இப்படி கொடுமைப்படுத்தலாம் என எந்தவொரு இறை மார்க்கமும் சொல்லவில்லையே என நெட்டிசன்கள் பலரும் சனா கானின் கணவரை திட்ட ஆரம்பித்தனர்.

உண்மை என்ன?: சோஷியல் மீடியாவில் அந்த வீடியோ தீயாக பரவியதையும் தனது கணவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்த்த நடிகை சனா கான், தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தவில்லை என்றும், நிகழ்ச்சியில் அதிக வெப்பம் காரணமாக எனக்கு வியர்த்துக் கொட்டிய நிலையில், கார் டிரைவரின் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. அதனால் தான் அவசரமாக என்னை அங்கிருந்து அழைத்துச் சென்று வீட்டுக்கு கூட்டிப் போனார் என விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், கணவரை காப்பாற்றவே சனா கான் இப்படியொரு பதிலை கூறியுள்ளார் என்றும் அக்கறையுடன் அவரது கணவர் அழைத்துச் சென்றது போல தெரியவில்லை என்றும் தொடர்ந்து பாலிவுட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.