மூணாறு கேரள மாநிலம் மூணாறில் காலையில் குளிர், பகலில் அதிகபட்ச வெயில் என மாறுபட்ட காலநிலை நிலவுகிறது.
சுற்றுலா பகுதியான மூணாறில் கோடை துவங்கியதும் பகலில் வெப்ப நிலை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஆனால் இந்தாண்டு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக வெப்ப நிலை 29 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது. இரவிலும் வெப்பம் அதிகரித்ததால் கம்பளி போர்த்த வேண்டிய நிலை இல்லை.
அதேபோல் வெப்பத்தை உணர்ந்த சுற்றுலா பயணிகள் மின் விசிறி வசதியுடன் அறைகள் உள்ள தங்கும் விடுதிகளை தேடினர். மூணாறில் பெரும்பாலான விடுதிகளில் மின்விசிறி இல்லை. பகலில் வெயில் சுட்டெரித்தாலும் காலையில் குளுமையான சூழல் நிலவுகிறது. ஒரு வாரமாக காலையில் அதிகபட்ச வெப்ப நிலை 7 டிகிரி செல்சியஸ்சாக இருந்தது. அந்த சூழல் சுற்றுலா பயணிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியதுடன் காலையில் சூழும் மேகக் கூட்டங்களை பார்த்து மகிழ்ந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement