திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக கோட்டயத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புதிய விமான நிலைய இடத்துக்கு ஒப்புதல் அளித்திருப்பது சுற்றுலாவுக்கு, குறிப்பாக, ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல செய்தி என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :