Director Bala : சூர்யாவை பழிவாங்க காத்திருக்கும் பாலா.. உண்மையை உடைத்த பிரபலம்!

சென்னை : நடிகர் சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகியதால், அவரை பழிவாங்க இயக்குநர் பாலா காத்திருப்பதாக சினிமா பிரபலம் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத ஒரு இடத்தைப்பிடிக்க காரணமாக இருந்த திரைப்படம் நந்தா.

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான நந்தா படத்தின் வெற்றிக்குப்பின் இருவரும் பிதாமகன் படத்தில் இணைந்தனர். இந்த படமும் சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

பெரும் எதிர்பார்ப்பு : சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சூர்யா, 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாவுடன் மீண்டும் இணைந்தார். இவர்கள் இருவரும் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை எகிறவைத்தது. நந்தா, பிதாமகன் போல இந்த படமும் பெரிய சம்பவத்தை நிகழ்ந்தும் என்றும், திரையுலகில் முக்கியமான படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

கடுப்பான சூர்யா : சூர்யாவின் 41 படத்திற்கு வணங்கான் என தலைப்பு வைக்கப்பட்டது. இணையத்தில் வெளியான டைட்டில் போஸ்டரே மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போது சூர்யாவை பாலா பல மணிநேரம் வெயிலில் ஓடவிட்டதால், கடுப்பான சூர்யா படப்பிடிப்பில் இருந்து கிளப்பி சென்னை வந்து விட்டதாக சொல்லப்பட்டது.

சூர்யா விலகல் : இதனால்,படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு பாலா சூர்யா இருவருக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் இணையத்தில் வெளியாகின. இதையடுத்து, பாலா திடீரென வெளியிட்ட அறிக்கையில், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் எழுந்துள்ளது எனவே, சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

பாலாவுக்கு கம்பேக் : இதையடுத்து, வணங்கான் படத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யாமல் அருண்விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அந்த கெட்டப்பில் அருண்விஜய் சும்மா மிரட்டலாக இருந்தார். எனவே இந்தப் படம் மூலம் இயக்குநர் பாலா கம்பேக் கொடுப்பார் எனவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Director Bala is waiting to take revenge on Suriya through the success of Vanangaan

பழிவாங்க சரியான நேரம் : இந்நிலையில் சினிமா விமர்சகரான வலைப்பேச்சு அந்தணன், பாலாவிற்கு சூர்யா மீது கோபம் இருந்தாலும், அதை வெளிக்காட்டுவதற்கான நேரம் இது இல்லை. இந்த படத்தை சிறப்பாக எடுத்து அதை சூர்யாவிற்கு காண்பித்து, அடடா இந்த படத்தில் நாம் நடிக்காமல் போய்விட்டோமே என்ற எண்ணத்தை வரவைக்க வேண்டும். இதுதான் சூர்யாவுக்கு சரியான தண்டனையாக இருக்கும் என்று பாலா நினைப்பதால், பழிவாங்க சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

வாழ்வா… சாவா பிரச்சனை தான் : கதையிலும் மாற்றமில்லை, இடத்திலும் மாற்றமில்லை. ஏற்கனவே சூர்யா நடித்த காட்சியை மட்டும் தூக்கிவிட்டு அருண்விஜயை நடிக்க வைத்துள்ளார். சினிமாவில் பாலாவை நம்பி பணம் போட எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை, மேலும் பாலா நிச்சயம் வெற்றிப்படத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கையும் யாருக்கும் இல்லாததால், தனது பெயரில் இருக்கும் கலங்கத்தை துடைக்கத்தான் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை எடுக்க திட்டமிட்டார். உண்மையில் இந்த படம் பாலாவுக்கு வாழ்வா… சாவா பிரச்சனை தான். இதில் வெற்றி பெற பாலா பெரும் முயற்சி எடுத்து வருகிறார் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.