Simbu: என்னா மனுஷன்யா.. தளபதி பாணியில் சிம்பு செய்த காரியம்: தீயாய் பரவும் போட்டோஸ்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் இன்றளவும் ரசிகர்களின் பேராதரவை தக்க வைத்துள்ளார். அண்மைக்காலமாக பலவித சர்ச்சைகளில் சிக்கிய இவர் தற்போது சினிமாவில் மீண்டும் மறு பிறவி எடுத்துள்ளர். இந்நிலையில் சிம்பு தனது ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து அளித்துள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
‘மாநாடு’ படத்திற்கு முன்புவரை பலவித் சர்ச்சைகளில் சிக்கிய சிம்பு மீது தயாரிப்பாளர்கள் பலவித் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். படப்பிடிப்பு தளத்திற்கு சரியாக வருவதில்லை. பாத்ரூமில் வைத்து டப்பிங் பேசினார் என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் உடல் எடை எக்கச்சக்கமாக அதிகரித்து தனது ஸ்மார்ட்டான லுக்கை இழந்தார் சிம்பு.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தான் உடல் எடையை முழுவதுமாக குறைத்து ‘மாநாடு’ படத்தில் தரமான கம்பேக் கொடுத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார் சிம்பு.

விண்ணத்தாண்டி வருவாயா, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிம்பு, கெளதம் மேனன் கூட்டணியில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் அமோக வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சிம்பு நடித்த ‘பத்து தல’ படம் அண்மையில் வெளியானது. கெளதம் கார்த்திக் லீட் ரோலில் நடித்த இந்தப்படம் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகி வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

‘பிச்சைக்காரன் 2’ பட ரிலீசை தடுக்க சதி.. மிகப்பெரிய நஷ்டம்: கடும் வேதனையில் விஜய் ஆண்டனி.!

இந்நிலையில் சிம்பு இன்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை தனது வீட்டில் வைத்து சந்தித்துள்ளார். மேலும் தனது கையால் ரசிகர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் என்னா மனுஷன்யா இவரு என நெகிழ்ச்சியுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் பாணியில் சிம்பு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து வைத்துள்ள விஷயம் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த ஹிட் படங்களால் குஷியால் இருக்கிறார் சிம்பு. அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகவுள்ள படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். ‘எஸ்டிஆர் 48’ படத்தை உலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பார்க்காத தலைவரை பார்க்கலாம்: ‘ஜெயிலர்’ படம் குறித்து வெளியான தாறுமாறு தகவல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.