வாஷிங்டன், அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக, 17 பேரை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2022 ஆக., 27ல், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டாக்டன் சீக்கிய கோவிலில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 5 பேர் உயிரிழந்தனர்.
இதே போல், கடந்த மார்ச் 23ல், சாக்ரமென்டோ சீக்கிய கோவிலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவங்கள், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக, 17 பேரை ஆயுதங்களுடன், போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களிடம் இருந்து, ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ஒரு ‘மெஷின் கன்’ உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement