சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை மெட்ரோவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. அந்தவகையில், தற்போது, சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடம் கட்டண முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாகன நிறுத்தும் இடத்திலும் வாகனத்தை நிறுத்திவிட்டு உரிமையாளர்கள் உடனடியாக வெளியில் சென்றுவிட உத்தரவிடப்பட்டது..
அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு மெட்ரோ பயண அட்டை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இன்னொரு அதிரடியை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் பணமில்லா பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும், பணப்புழக்கத்தை குறைக்கவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் நிலையில் ப்ரீபெய்டு பயண அட்டைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புதிதாக வாகனங்களை நிறுத்தவும் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயண அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சி.எம்.ஆர்.எல். நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏப்ரல் 19ம் தேதி முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் செலுத்துவதற்கு மெட்ரோ ரயில் பயண அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி பயணிகள் வாகன நிறுத்தமிடங்களில் இருந்து வேகமாக நுழைவது மற்றும் வெளியேறுவது, பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளின் வசதி உட்பட பல நன்மைகளை வழங்கும். மேலும், பயணிகள் தங்களுக்கான மெட்ரோ ரயில் பயண அட்டையை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களிலும், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பயணிகள் தங்கள் பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் விற்பனை செய்யும் இடத்தில் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்திலும் டாப் அப் செய்து கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில் வாகன நிறுத்துமிடத்திற்கான அணுகல் பயண அட்டைகளுடன் மட்டுமே கிடைக்கும் இன்று முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்படுவதாலும் அனைத்துப் பயணிகளும் உடனடியாக மெட்ரோ ரயில் பயண அட்டைகளை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது .
அந்தவகையில், இன்று முதல் அதாவது ஏப்ரல் 19-ம் தேதியில் இருந்து இந்த முறை அமலுக்கு வந்துள்ளது.. எனவே, அனைத்து மெட்ரோ ஸ்டேஷன்களிலும் இருக்கும் பார்கிங் இடங்களிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க பணத்திற்குப் பதிலாக மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.. இதே அட்டையைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணங்களையும் இனி நாம் மேற்கொள்ளலாம். மெட்ரோ இணையதளத்திலும் இந்த அட்டைக்கு ரீ-சார்ஜும் செய்து கொள்ளலாம்..!!