மதுரை அதிமுக மாநாட்டில் ட்விஸ்ட்… ஓபிஎஸ் செய்த தவறும், எடப்பாடியின் மவுசும்… பாபு முருகவேல் பளீச்!

அதிமுகவின் பொதுச் செயலாளராக

பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து நடந்த முதல் செயற்குழு கூட்டத்தில், வரும் 2024 மக்களவை தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு தீவிரமாக உழைக்க வேண்டும். ஆகஸ்ட் 20ஆம் தேதி எடப்பாடி தலைமையில் நடக்கும் அதிமுக மாநாடு திருப்புமுனையாக அமையும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தென் மாவட்டங்களில்

செல்வாக்கு பெற்ற நபராக விளங்குகிறார்.

முக்குலத்தோர் ஆதரவு

அவர் சார்ந்த முக்குலத்தோர் சமூகமும் ஆதரவாக நிற்கிறது. அதிலும் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்து நின்றால் பலம் கூடிவிடும். இவர்களின் செல்வாக்கிற்கு மத்தியில் மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்தி விட முடியுமா? என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே எடப்பாடி தரப்பின் கனவு பலிக்காது என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால் இந்த பிம்பத்தை தவிடு பொடியாக்கும் வகையில் மதுரை மாநாடு இருக்கும் என்கின்றனர் எடப்பாடி ஆதரவாளர்கள்.

மதுரை அதிமுக மாநாடு

மதுரை மாநாடு தொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான பாபு முருகவேலிடம் ’சமயம் தமிழ்’ சார்பில் பேசினோம். அதற்கு அவர், அதிமுகவின் பிரதான கொள்கை என்னவென்று சொன்னால் திமுக எதிர்ப்பு. இதன் பின்னணி குறித்து பார்த்தால் எந்தவித அடிப்படை காரணங்களும் இன்றி, மனிதாபிமானம் அற்ற வகையில் பொய்யான காரணத்தை சொல்லி எம்.ஜி.ஆரை வெளியேற்றி விட்டனர். அப்போது உங்கள் எண்ணம் என்னவென்று மக்களிடம் எம்.ஜி.ஆர் கொண்டு சேர்க்கிறார்.

அதிமுகவின் உருவாக்கம்

அதன்பிறகு தொண்டர்கள் அனைவரும் ஒன்றுகூடி உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை உருவாக்கவில்லை. அவர் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினர். இதையடுத்து ’தீய சக்தி கருணாநிதி’ என்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் மிகவும் தீவிரமாக எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். இத்தகைய சூழலில் மூன்று முறை ஓபிஎஸ்க்கு முதல்வர் நாற்காலியை அதிமுக அளித்தது. ஆனால் தடம் மாறி கருணாநிதிக்கு புகழாரம் சூட்டி சட்டமன்றத்தில் பேசினார்.

ஓபிஎஸ் செய்த தவறுகள்

இதை அடிப்படை தொண்டன் ஒருவன் கூட ஏற்றுக் கொள்ள மாட்டான். இந்த இடத்திலேயே அதிமுகவில் முக்கிய தலைவர் என்ற அந்தஸ்தை இழந்து விடுகிறீர்கள். அதுமட்டுமின்றி எதையெல்லாம் அதிமுகவின் தலைவர் செய்யக் கூடாதோ, அதையெல்லாம் ஓபிஎஸ் செய்து விடுகிறார். அதிமுகவை பொறுத்தவரை சமரசமில்லாத, வலுவான, ஆண்மையுள்ள தலைவரை தான் எதிர்பார்த்தோம்.

எடப்பாடியின் திட்டம்

அந்த தலைமைக்கு மூன்றாம் தலைமுறையாக எடப்பாடி பழனிசாமி கிடைத்திருக்கிறார். தமிழகத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் மாபெரும் மாநாட்டை நடத்தி மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி, திமுகவை 10 ஆண்டுகள் ஆட்சி கட்டிலில் வர முடியாமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தார். இத்தகைய எழுச்சியை எடப்பாடி தலைமையில் கொண்டு வர வேண்டும் என்று மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மாபெரும் மாநாட்டிற்கு திட்டமிட்டுள்ளோம்.

இது ஓபிஎஸ்க்கு போட்டியாக நடத்தும் மாநாடு அல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை முன்னிலைப்படுத்தும் நிலை அதிமுகவில் இல்லை. எனவே அனைத்து சமூகத்தினரின் ஆதரவோடு தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மதுரை மாநாடு அமையும் என்று பாபு முருகவேள் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.