மாற்றுத் திறனாளி கிரிக்கெட் கேப்டனை அவமதித்த நடத்துநர்: அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை!

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா. இவர் நேற்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்வதற்காக நேற்று (ஏப்ரல் 18) இரவு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான கழிப்பறை வசதியுடன் கூடிய எஸ்.இ.டி.சி பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார்.

அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என கூறியுள்ளார்.

அப்போது சச்சின் சிவா, இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என பதிலளத்துள்ளார். அதற்கு, நடத்துநர் சிவாவிடம் , “முகத்தை உடைத்துவிடுவேன். எனக்கு எல்லாம் தெரியும்” என கூறி மிரட்டல் விடுத்தாக கூறுகிறார்கள். அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்றாமல், அப்படியே விட்டுசென்றுள்ளார். மேலும் காவல்துறையினர் முன்பாகவே, ‘நீ மதுரைக்கு வா. பார்த்துக்கொள்ளலாம்’ என கூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துவிடுத்ததாக சொல்கிறார்கள். இதனை தொடர்ந்து மற்றொரு பேருந்தில் சச்சின் சிவா பயணித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்ட அவருக்கு ஆதரவு பெருகியது.

இந்நிலையில், சச்சின் சிவாவை ஏற்றமறுத்த நடத்துநனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பணியில் இருந்த நடந்துநர், ஓட்டுநர் இருவரிடமும் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.