52 வயசு கிழவி நானு.. தொடர்ந்து வந்த ஆபாச மெசேஜ்: கிழித்து தொங்கவிட்ட நடிகை ஐஸ்வர்யா.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா பாஸ்கரன். பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான இவர் ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தார். பாக்யாராஜின் ‘ராசுக்குட்டி’ என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ‘ஆறு’ படத்தில் சிறப்பான குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இந்தப்படத்தில் சவுண்ட் சரோஜாவாக நடித்து அனைவரையும் அலற விட்டார் ஐஸ்வர்யா.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இவர் தற்போது சொந்தமாக யூடிப் சேனல் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். அதில் சோப்பு மற்றும் பெண்கள் அழகு சாதன பொருட்களை விளம்பரம் செய்து ஆன்லைன் மூலம் விற்று வருகிறார். இதற்காக தனது வாட்சப் நம்பரையும் பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. இந்நிலையில் தனது நம்பருக்கு தொடர்ச்சியாக ஆபாச மெசேஜ் வருவதாக கூறி கிழத்து தொங்கவிட்டுள்ளார்.

Simbu: என்னா மனுஷன்யா.. தளபதி பாணியில் சிம்பு செய்த காரியம்: தீயாய் பரவும் போட்டோஸ்.!

இது தொடர்பாக வீடியோவில் பேசிய அவர், யூடிப் சேனல் மூலம் ஆர்டரை பெறுவதற்காக வாட்சப் நம்பரை பகிர்ந்ததில் இருந்து ஆபாச மெசேஜ் வந்து கொண்டே இருக்கிறது. இதைப்பற்றி வீடியோவில் பேச வேண்டாம் என நினைத்தேன். ஆனால் என் மகள், இதுபோன்ற பிரச்சனைகள் வந்தால் பெண்கள் முன்வந்து பேச வேண்டும். நீயே அமைதியாக இருக்காதே என்று கூறினாள். இதனால் தான் தற்போது வீடியோவில் பேசுகிறேன்.

‘பிச்சைக்காரன் 2’ பட ரிலீசை தடுக்க சதி.. மிகப்பெரிய நஷ்டம்: கடும் வேதனையில் விஜய் ஆண்டனி.!

மேலும் தனக்கு வந்த ஆபாச புகைப்படங்களை வீடியோவில் காட்டியுள்ள ஐஸ்வர்யா, உங்களுக்கு அசிங்கமா இல்லையா? மெனோபாஸ் நின்ன 52 வயசு கிழவி நானு. நான் சோப்பு தான் விற்கிறேன். என்னை விற்கலை. காலைல 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வாட்சப்பில் ஆர்டர் கொடுக்கலாம்ன்னு தெளிவா சொல்லியும் நைட் 11 ,மணிக்கு மெசேஜ் பண்ணினால் என்ன அர்த்தம் எனக்கேட்டு கிழத்து தொங்கவிட்டுள்ளார். அவர் பேசியுள்ள இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.