Crazy Mohan wife: கிரேஸி மோகன் மனைவி மரணம்.. இன்னொரு அண்ணி என கமல் உருக்கம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
கிரேஸி மோகனின் மனைவி நளினியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிரேஸி மோகன்நாடக கலைஞர், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர், நடிகர், ஓவியர், கவிஞர் என பல முகங்களை கொண்டவர் கிரேஸி மோகன். 1979ஆம் ஆண்டு கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற டிராமா ட்ரூப்பை தொடங்கினார். இதன் மூலம் ஏராளமான மேடை நாடகங்களை தொடங்கிய கிரேஸி மோகன், தொலைக்காட்சி சீரியல்களையும் இயக்கியுள்ளார்.
​நயன்தாரா மகன்களின் பெயரில் உள்ள ரகசியம்!​
வசூல் ராஜா எம்பிபிஎஸ்ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியுள்ள கிரேஸி மோகன், பல ப டங்களில் நடித்தும் இருக்கிறார். கமல்ஹாசன், சினேகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியனா வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்திருந்தார் கிரேஸி மோகன். கிரேஸி மோகனின் நகைச்சுவையான வசனங்களுக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
​Vijay: ‘விஜய் மிகப்பெரிய ஸ்டார்… அதுமட்டுமில்ல’.. புகழ்ந்து தள்ளிய பெங்காலி சூப்பர் ஸ்டார்!​
கிரேஸி மோகன் மரணம்இந்நிலைய்ல கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி கிரேஸி மோகன் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உயிர் பிரியும் போது நடிகர் கமல்ஹாசன் கூடவே இருந்தார். இந்நிலையில், கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் நேற்று காலமானார்.
​திருமணத்தை தள்ளிப்போடும் த்ரிஷா… காரணம் இதுதான்!​
இன்னொரு அண்ணிஅவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், “எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
​Trisha: கல்யாணம் எப்போ? ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்த ‘குந்தவை’ த்ரிஷா!​
ஆறுதல் கூறும் ரசிகர்கள்நடிகர் கமல்ஹாசனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருவதோடு நளினி கிரேஸி மோகனின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை ஷண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், மன்மதன் அம்பு ஆகிய படங்களக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
​Ponniyin Selvan 2: சோழர் குல வரலாற்றை பேசும் பொன்னியின் செல்வன்… தஞ்சாவூர் போகாதது ஏன்?​
Crazy Mohan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.