ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்தியா தற்போது உலகிலேயே ஸ்மார்ட் கருவிகள் அதிகம் விற்பனை ஆகும் ஒரு நாடாக மாறியுள்ளது. இங்கு பலர் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் கருவிகள் என பலவற்றை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக தினசரி பயன்பாட்டிற்கு இப்போது TWS எனப்படும் வயர்லெஸ் ஏர்பட்ஸ் அதிகம் வாங்குகிறார்கள். இவற்றை
உடற்பயிற்சி, அலுவலகம், பயணம், பொழுதுபோக்கு, இசை நிகழ்ச்சி என பலவற்றிற்கு பயன்படுத்துகிறார்கள்.
அதில் அதிகம் விற்பனையாகும் கருவிகள் 2000 ஆயிரம் ரூபாய் விலைக்கு கீழ் உள்ள TWS Earbuds ஆகும். இந்த பட்ஜெட் விலைக்கு பிரீமியம் வசதியாக பார்க்கப்படும் ANC (Active Noise Cancellation) வசதியை பல நிறுவனங்கள் வழங்குகின்றன.
இந்த ANC மூலம் நாம் வெளியுலகில் கேட்கும் இரைச்சல் சத்தங்களை குறைத்து தெளிவான இசையை கேட்டு ரசிக்கமுடியும். இந்த வசதி பிரீமியம் கருவிகளில் மட்டுமே காணப்பட்டுவந்த நிலையில் இப்பொது பட்ஜெட் Earbuds கருவிகளிலேயே கிடைக்கிறது. இந்த வசதியுடன் கூடிய சிறந்த TWS கருவிகளின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
1.Oppo Enco Buds 2இந்தியாவிலேயே பட்ஜெட் விலையில் சிறந்த TWS கருவியாக இருப்பது Oppo நிறுவனத்தின் இந்த ஏர்பட்ஸ் ஆகும். இதில் நாம் தொலைபேசி அழைப்புகளுக்கு Noise Cancellation வசதியை பயன்படுத்தமுடியும்.
இதில் 10mm டைனமிக் ட்ரைவர் வசதி, ப்ளூடூத் 5.2, 28 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி, 7 மணிநேரம் நீடிக்கும் ஏர்பட்ஸ், IPX4 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டண்ட், டச் கன்ட்ரோல் என பல வசதிகள் இதில் உள்ளன. இதன் விலை 1,799 ஆயிரம் ரூபாய் ஆகும்.
2.Realme Buds Air 3 Neoஇரண்டாவது இடத்தில் இருப்பது ரியால்மி நிறுவனத்தின் Buds Air 3 Neo ஏர் பட்ஸ் ஆகும். இந்த கருவியில் 10mm டைனமிக் பாஸ் ட்ரைவர் வசதி, தொலைபேசி அழைப்புகளுக்கு AI ENC Noise cancellation வசதி, 30 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி, Dolby Atmos வசதி உள்ளது.
மேலும் ப்ளூடூத் 5.2, IPX5 வாட்டர் ரெஸிஸ்டண்ட், 7 மணிநேரம் நீடிக்கும் பட்ஸ், ஸ்மார்ட் டச் கன்ட்ரோல், பாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. இதன் விலை 1,999 ஆயிரம் ரூபாய் ஆகும்.
3.Oneplus Nord Buds CEஇந்த செக்மென்ட்டில் மிகப்பெரிய 13.4mm டைனமிக் பாஸ் ட்ரைவர் உள்ள கருவி இந்த ஒன்ப்ளஸ் நோர்ட் பட்ஸ் CE ஆகும். இதிலும் தொலைபேசி அழைப்புகளுக்கு AI Noise cancellation வசதி, 20 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி, ஸ்மார்ட் டச் கன்ட்ரோல், 4.5 மணிநேரம் நீடிக்கும் ஏர்பட்ஸ், ப்ளூடூத் 5.2, IPX4 வாட்டர் ரெஸிஸ்டண்ட், பாஸ்ட் சார்ஜிங் வசதிகள் போன்றவை உள்ளன. இதன் விலை 2,299 ஆயிரம் ரூபாய் ஆகும்.
4.Oppo Enco Budsஇந்த கருவி 24 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி கொண்டுள்ளது. இதில் Call Noise cancellation வசதி, 6 மணிநேரம் நீடிக்கும் ஏர்பட்ஸ், 8mm டைனமிக் ட்ரைவர் வசதி, ப்ளூடூத் 5.2, IP54 வாட்டர் மாறும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் உள்ளது. இதன் விலை 1,799 ஆயிரம் ரூபாய் ஆகும்.
5.Boat Airdrops 411 ANCஇதில் 10mm ட்ரைவர் வசதி, ANC, டச் கன்ட்ரோல், ASAP சார்ஜிங் டெக்னாலஜி, 17.5 மணிநேரம் நீடிக்கும் பேட்டரி, IPX4 வாட்டர் ரெஸிஸ்டண்ட், ப்ளூடூத் 5.2, வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற வசதிகள் உள்ளது. இதன் விலை 2,499 ஆயிரம் ரூபாய் ஆகும்.செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்