ஹைதராபாத்: வெங்கடேஷ் டகுபதி மற்றும் ராணா டகுபதி படு மோசமான ஆபாசக் காட்சிகளில் எல்லை மீறி நடித்திருந்த ராணா நாயுடு முதல் சீசனே பெரும் சர்ச்சைகளை கிளப்பின.
அந்த சீரிஸ் வெளியான நிலையில், கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நடிகர் ராணா டகுபதியே மன்னிப்புக் கேட்டிருந்தார்.
அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகாது என ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தற்போது ராணா நாயுடு சீசன் 2 விரைவில் வெளியாகப் போவதாக ஷாக்கிங் அப்டேட்டை கொடுத்துள்ளது.
ராணா நாயுடு வெப்சீரிஸ்: பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மற்றும் பிரபல டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் டகுபதி இருவரும் இணைந்து நடிக்க நெட்பிளிக்ஸில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராணா நாயுடு எனும் வெப்சீரிஸ் வெளியானது. ரே டோனவன் எனும் வெப்சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த வெப்சீரிஸ்.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் போராட்டக் கதையில் ஏகப்பட்ட ஆபாசக் காட்சிகளையும் ஆபாச வசனங்களையும் திணித்து சுபர்ன் வர்மா மற்றும் கரண் அன்ஷுமான் இயக்கத்தில் உருவான முதல் சீசனுக்கு கடும் எதிர்ப்புகள் குவிந்தன.

இளைஞர்கள் மத்தியில் ஹிட்: அடல்ட் வெப்சீரிஸ்கள் என்றாலே இளைஞர்களை டார்கெட் செய்தே உருவாக்கப்பட்டு வருகின்றன. ராணா டகுபதி ஆபாச காட்சிகளில் கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் படு மோசமாக நடித்ததை பார்த்து ஸ்டன்னான ஃபேன்ஸ் இந்த வெப்சீரிஸை எப்படியாவது பார்த்தே ஆக வேண்டும் என நெட்பிளிக்ஸை சப்ஸ்கிரைப் செய்து பார்த்த நிலையில், இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது இந்த வெப்சீரிஸ்.
சர்ச்சையும் மன்னிப்பும்: டோலிவுட்டின் டாப் ஹீரோக்களான ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் டகுபதி இருவரும் கொஞ்சம் கூட குடும்ப ரசிகர்களை மனதில் கொள்ளாமல் காசுக்காக படு ஆபாசமான வெப்சீரிஸில் நடித்துள்ளனர் என்கிற கடுமையான விமர்சனங்கள் இருவரும் மீதும் எழுந்தன.

உடனடியாக இந்த வெப்சீரிஸை குடும்பத்துடன் பார்க்க வேண்டாம் என்றும் யாருடைய மனதையும் இந்த வெப்சீரிஸ் புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என ராணா டகுபதி மன்னிப்பும் கேட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரண்டாம் சீசன் வருது: அதன் காரணமாக பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய ரே டோனவன் வெப்சீரிஸ் போல ராணா நாயுடு அடுத்தடுத்த சீசன்கள் வராது என்கிற முடிவுக்கு ரசிகர்கள் வந்திருந்த நிலையில், தற்போது அதிரடியாக நெட்பிளிக்ஸ் கவலையே படாதீங்க விரைவில் சீசன் 2 வருது என்கிற புதிய ப்ரோமோவையே வெளியிட்டுள்ளனர்.

#RanaNaidu ஹாஷ்டேக் உடன் ராணா நாயுடு சீசன் 2 வெப்சீர்ஸ் அறிவிப்பு டிரெண்டாகி அருகிறது. இந்த வெப்சீரிஸ் வெளியாகக் கூடாது என எதிர்ப்புகளும், ராணா மற்றும் வெங்கடேஷ் கம்பேக் கொடுக்கப் போகின்றனர் என ஆதரவாகவும் ஏகப்பட்ட ட்வீட்கள் குவிந்து வருகின்றன.