Trisha: த்ரிஷாவின் திருமணம் நின்றது ஏன்?: அம்மா உமா சொன்ன உண்மை

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Trisha wedding: த்ரிஷாவின் திருமணம் நின்றுபோனது ஏன் என அவரின் அம்மா உமா விளக்கம் அளித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

​த்ரிஷா​20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார் த்ரிஷா. அவருக்கு 40 வயது ஆகிவிட்டது என்று சொல்ல முடியாத அளவுக்கு இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார். நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இருக்கிறார். அவரின் இளமையையும், அழகையும் பார்த்து அனைவரும் வியக்கிறார்கள். மேலும் த்ரிஷாவுக்கு திருமணம் எப்பொழுது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
​திருமணம்​த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் நின்று போனது. தொடர்ந்து சினிமாவில் நடிக்கக் கூடாது என்று வருண் மணியன் கூறியதால் திருமணம் நின்றுவிட்டதாக அப்பொழுது பேசப்பட்டது. இந்நிலையில் திருமணம் ஏன் நின்றது என த்ரிஷாவின் அம்மா உமா கூறியதாக ஒரு தகவல் வலம் வந்து கொண்டிருக்கிறது.
​உண்மை​உமா கூறியிருப்பதாவது, த்ரிஷா படங்களில் நடிப்பது தெரிந்து தான் பெண் பார்த்தார்கள், நிச்சயமும் செய்தார்கள். த்ரிஷா தொடர்ந்து நடிக்க வேண்டும் என ஊக்குவித்தார் வருண் மணியன். திருமணம் நின்று போனதற்கான உண்மையான காரணம் எங்களுக்கு தான் தெரியும். ஆனால் அது பற்றி நிறைய எழுதிவிட்டார்கள். திருமணம் நின்று போனதற்கும் பல பெரியவர்களுக்கும் தொடர்பு உள்ளது. ஒத்து வராத விஷயங்களை சமரசம் செய்து வாழ்வதில் நியாயம் இல்லை. ஒத்து வரவில்லை என்றால் பிரிவது தான் சரி என்றாராம்.
​பொன்னியின் செல்வன் 2​Trisha: பொன்னியின் செல்வன், குந்தவையின் ப்ளூ டிக்கை பறித்த ட்விட்டர்: காரணம் இது தான்மணிரத்னம் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தை விளம்பரம் செய்து வருகிறார் த்ரிஷா. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஒரு இடத்தில் ரசிகர்களை கையை காட்டி உயிர் அவர்களுடையது. தற்போதைக்கு அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்றார்.

​ரசிகர்கள்​த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். விரைவில் திருமதியாகிவிடுங்கள் த்ரிஷா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகளில் த்ரிஷாவை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதால் திருமண கேள்வியை தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

​Trisha: அரசியலுக்கு வரும் ஆசை இருக்கா?: த்ரிஷாவின் தெளிவான பதில்​
​லியோ​திருமண கேள்வி மட்டும் அல்ல த்ரிஷா செல்லும் இடமெல்லாம் லியோ பட அப்டேட்டும் கேட்கிறார்கள் ரசிகர்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா. பொன்னியின் செல்வன் 2 படத்தை விளம்பரம் செய்ய பிரேக் எடுத்துவிட்டு வந்திருக்கிறார். படம் குறித்து வாய் திறக்கக் கூடாது என சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் லோகேஷ். அதனால் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் சிரித்து மழுப்புகிறார் த்ரிஷா.

​Leo: ஆர்டர் போட்ட லியோ லோகேஷ் கனகராஜ்: பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் ‘குந்தவை’த்ரிஷா​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.