கோலாலம்பூர், தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்துபவர்களுக்கும், பயன்படுத்துபவர்களுக்கும் அதிகபட்சமாக துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது.
இதற்கு அங்கு உள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆறு மாதங்களாக துாக்கு தண்டனை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த தங்கராஜ் சுப்பையா,46 என்ற இந்திய வம்சாவளி நபர் ஒரு கிலோ மரிஜ்வானா என்ற போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில் 2017ல் கைது செய்யப்பட்டார்.
இவருக்கு 2018ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து வரும் 26ம் தேதி இவர் துாக்கிலிடப்படுவார் என தங்கராஜின் குடும்பத்துக்கு சிறைத் துறை மற்றும் நீதிமன்றம் தகவல் அளித்துள்ளது.
சிங்கப்பூர் அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலர்கள், ‘இது கொடூரமான மனித உரிமை மீறல்’ என குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கடுமையாக எதிர்த்து வரும் சிங்கப்பூர் அரசு, கடந்த ஆண்டு மட்டும் 11 பேரை இது தொடர்பான வழக்குகளில் துாக்கிலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement