புதுடில்லி, துபாயில் இருந்து புதுடில்லிக்கு வந்த, ‘ஏர் இந்தியா’ விமானத்தில், பைலட் ஒருவர் ‘காக்பிட்’டுக்குள் தன் தோழியை அனுமதித்த விவகாரம் குறித்து, விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த பிப்., 27ல், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, புதுடில்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது.
அப்போது, விமானி ஒருவர், காக்பிட் எனப்படும் விமானிகள் அறைக்குள், தன் தோழியை அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விமானப் போக்குவரத்து துறை
விதிகளின்படி, விமானிகளை தவிர வேறு எந்த நபருக்கும் அவர்களது அறையில் அனுமதி கிடையாது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விசாரணையை துவங்கி உள்ளது.
இது குறித்து, ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘டி.ஜி.சி.ஏ., விசாரணைக்கு நிச்சயம் முழு ஒத்துழைப்பு அளிப்போம். ‘பயணியரின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்ய மாட்டோம். குற்றச்சாட்டில் உண்மை இருந்தால், சம்பந்தப்பட்ட பைலட் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement