காஷ்மீரை அதிரவைத்த தாக்குதல்.. பலியான 5 ராணுவ வீரர்கள்.. பாக். அமைச்சர் சொன்னதும் கிளம்பிய தீவிரவாதிகள்!

இஸ்லாமாபாத்:
காஷ்மீரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், தீவிரவாதிகள் இந்த தாக்குதலை எப்படி அரங்கேற்றினர்.. எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என்ற முழு விவரங்களும் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் ராணுவம், துணை ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் அட்டகாசம் கடந்த காலங்களில் கணிசமாக குறைந்திருந்தது.

தீவிரவாதிகள் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டதால் அவர்களின் கொட்டம் சற்று அடங்கி இருந்தது. இந்த சூழலில்தான், நேற்று ஒரு பயங்கர தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்றி உள்ளனர்.

ரகசிய தகவல்

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் ரஜோரி செக்டாரில் உள்ள பாடா – துரியன் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு 6 ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ‘ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ்’ படைப்பிரிவைச் சேர்ந்த அந்த 6 ராணுவ வீரர்களும் ராணுவ வேனில் அங்கு வந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மழை பெய்ததால் சாதகம்

அப்போது அங்கு பலத்த மழை பெய்துள்ளது. இதனால் ராணுவ வாகனம் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது. இதனை அங்குள்ள குன்றுகளில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கவனித்தனர். மழை பெய்வதை தங்களுக்கு சாதகமாக மாற்றிய தீவிரவாதிகள், அந்த வேனை 20 அடி தூரத்துக்கு நெருங்கி நாலாபுறமும் சுற்றி வளைத்தனர். கனமழை காரணமாக தங்களை தீவிரவாதிகள் நெருங்குவதை ராணுவ வீரர்களால் பார்க்க முடியவில்லை.

சுற்றிவளைத்து தாக்குதல்

இதையடுத்து, தங்களிடம் இருந்த இயந்திரத் துப்பாக்கியால் வேன் மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். என்ன நடக்கிறது என்பதை சுதாரிப்பதற்கு உள்ளாக துப்பாக்கி குண்டுகள் வேனை சல்லடை செய்தன. இதனைத் தொடர்ந்து, ராணுவ வாகனத்தின் பெட்ரோல் டேங்கை குறிவைத்து தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் பெட்ரோல் டேங்கில் தீப்பிடித்து வாகனம் முழுவதும் மளமளவென பரவியது. இந்த கொடூர தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள்

ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை பிடிப்பதற்காக, காஷ்மீர் முழுவதும் ராணுவத்தினரும், போலீஸாரும் இரவு பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் ஆதரவை பெற்ற மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தான் அமைச்சர்..

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவுக்கு வருவதாக அறிவித்திருந்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இந்த தாக்குதலை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.