சிறப்பாக விளையாடிய ஜடேஜா, கான்வே: சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி



ஐபிஎல்-லில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சுழலில் சிக்கிய சன்ரைசர்ஸ் 

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொண்டது, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில், தொடக்க வீரர்கள் ஹரி புரூக் 18 ஓட்டங்களையும் அபிஷேக் சர்மா 34 ஓட்டங்களையும் எடுத்து இருந்த போது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

பின்னர் வந்த வீரர்கள் திரிபாதி(21), கேப்டன் மார்க்ராம்(12) கிளாசென்(17) மற்றும் மயங்க் அகர்வால்(2) ஆகிய ஓட்டங்களை எடுத்து இருந்த போது விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினர்.

சென்னை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும்,  தீஷனா, ஆகாஷ் சிங் மற்றும் மதீஷ பத்திரனா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

CSK வெற்றியை உறுதி செய்த கான்வே

எளிய இலக்கை துரத்தி இரண்டாவது பேட்டிங்குக்கு களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது.
தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 30 பந்துகளில் 35 ஓட்டங்கள் குவித்து இருந்த போது எதிர்பாராத விதமாக ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

ஆனால் மற்றொரு தொடக்க வீரரான டெவோன் கான்வே இறுதி வரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 77 ஓட்டங்கள் குவித்தார்.
மேலும் ரஹானே 9 ஓட்டங்கள், ராயுடு 9 ஓட்டங்கள், மொயின் அலி ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்கள் குவித்து இருந்தனர்.

இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் குவித்தது.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.