சொந்த நகரத்தின் மீது வெடிகுண்டு வீசிய ரஷ்ய போர் விமானம்: பரபரப்பு வீடியோ காட்சி


ரஷ்ய போர் விமானம் ஒன்று தற்செயலாக அதன் சொந்த நகரத்தின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

பெல்கோரோடில் வெடிகுண்டு தாக்குதல்

உக்ரைனின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோடில்(Belgorod)  வியாழக்கிழமை பிற்பகுதியில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் பதிவாகி இருந்தது.

இதையடுத்து பெல்கோரோட் பிராந்திய கவர்னர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ், அப்பகுதிக்கு அவசரகால நிலையை அறிவித்து இருந்தார்.

அதேசமயம் இந்த சம்பவத்திற்கான காரணம் என்னவென்று குறிப்பிடப்படாமல் இருந்த நிலையில், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தொடர்பான தகவல்களும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

சொந்த நகரத்தின் மீது குண்டு வீசிய ரஷ்ய போர் விமானம்

இந்நிலையில் ரஷ்ய போர் விமானம் ஒன்று உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள அதன் சொந்த நகரங்களில் ஒன்றான பெல்கோரோட் மீது வியாழக்கிழமை தற்செயலாக குண்டு வீசித் தாக்கியது பிபிசி அறிக்கையின்படி தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிக்கையில், ரஷ்யாவின் Su-34 போர் விமானங்களில் ஒன்று வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி 22:15 மணிக்கு அதன் சொந்த நகரான பெல்ல்கோரோட் மீது தற்செயலாக அதன் விமான வெடிகுண்டுகளை வெளியேற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த தற்செயல் தாக்குதலால் நகரத்தில் 20 மீட்டர் ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதுடன், கார் ஒன்று கடையின் கூரையின் மீது தூக்கி வீசப்பட்டுள்ளது.
இதில் 3 பேர் வரை காயமடைந்துள்ளனர் மற்றும் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், வெடிமருந்து தரையில் மோதிய தருணத்தை பார்க்க முடிகிறது. 
 

பிப்ரவரி 2022 இல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்பியதிலிருந்து பெல்கோரோட் பகுதி மீண்டும் மீண்டும் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

சொந்த நகரத்தின் மீது வெடிகுண்டு வீசிய ரஷ்ய போர் விமானம்: பரபரப்பு வீடியோ காட்சி | Russian Fighter Jet Drop Bombs On His Own Belgorod



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.