திமுக: அடுத்த குண்டை தூக்கிப் போட்ட அரசு.. இனி நீர்வளம் அவ்வளவுதான் முடிஞ்சு.!

நீர்வளம் மிக்க பகுதிகளில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எட்டு மணி நேர வேலை உரிமையை பறிக்கும் தொழிற்சாலை சட்ட திருத்தத்தை கைவிட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒரே நாளில் இரண்டு குண்டு

தமிழகத்தில் நேற்று முதல் இரண்டு விஷயங்கள் பேசு பொருளாகாவும், சர்ச்சையாகவும் மாறியுள்ளன. ஒன்று தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 12 மணி நேரமாக அதிகரித்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பெருமுதலாளிகளுக்கு உழைப்பாளர்களை சுரண்ட அனுமதிப்பதா என திமுகவின் கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த பின்பும், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது

கரும்புள்ளியாக மாறியுள்ளது.

பலர் போராடி, உயிர்நீத்து, குடும்பங்களை இழந்து பெற்ற உரிமையை இப்போது திமுக அரசு தாரை வார்ப்பதாகவும், பாஜக இதே மசோதாவை கொண்டு வந்த போது எதிர்த்த திமுக, தற்போது ஆதரிப்பது எந்த விதத்தில் நியாயம் என திமுக ஆதரவாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் பல்வேறு ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தசூழலில் நேற்றைய சட்டப்பேரவையில் திமுக அரசு சைலண்டாக இன்னொரு பெரிய வேலையை செய்துள்ளது சூழலியல் ஆர்வளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீர்வளம்

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தனது ட்விட்டர் பதிவில், ‘‘நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஏக்கருக்கு குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஒருங்கிணைத்து வாரிக்கொடுக்கும் வகையில் தமிழ் நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்களான) சட்டம் [Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023] என்னும் புதிய சட்ட மசோதாவிற்கு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு சட்டபேரவையில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் உள்ளடங்கிய 100 ஏக்கர் அதிகமான பரப்பளவில் திட்டமிடப்படும் எந்த ஒரு திட்டத்திற்கும் அரசின் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டால், நீர்நிலைகளையும் திட்ட உரிமையாளர் தன் பயன்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது இச்சட்ட மசோதா. இப்படி நீர்நிலைகளை பயன்படுத்திக்கொள்ள நிபுணர் குழு மூலம் நிலம் ஒருங்கிணைப்பு திட்டம் உருவாக்கப்படும் என்றும் மசோதா கூறுகிறது.

தண்ணிக்கு இனி நோ

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்கள் நீர்நிலைகளில் அமைக்க மட்டுமே ஏதுவாக இருக்கும். மேலும் நீர்நிலைகள் பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய பிற சட்டங்கள் மற்றும் ஆணைகள் நீர்த்துப்போகும் வாய்ப்புகளையும் இந்த சட்ட மசோதா உருவாக்கியுள்ளது. மேலும், வேளாண்மை, மேய்ச்சல் சார்ந்த செயல்பாடுகளும் பாதிப்புகுள்ளாகும். நிலப்பயன்பாடு மாற்றப்படுவது புவி வெப்பமாதலை அதிகரிக்கும் என்று ஐ.பி.சி.சி. ஆய்வறிக்கைகள் கூறுவதௌ கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே உடனடியாக இந்த சட்ட மசோதாவை திரும்பப்பெற பூவுலகின் நண்பர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்’’ என தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.