டாக்கா,
வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் இருந்து டாக்கா-மாவா நெடுஞ்சாலையில் நேற்று காலை ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் ஷோலோகர் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மற்றொரு பஸ்சை முந்துவதற்கு டிரைவர் முயற்சி செய்தார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது பஸ் மோதியது. இதில் அந்த பஸ் உருக்குலைந்தது.
இதுகுறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.