ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும்.
ஆனால், பிறை எந்த நாளில் தெரியும், எந்த நாட்டில் எந்த நாளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்ற குழப்பம் உலகம் முழுவதும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை வளைகுடா நாடுகளில் பிறை தெரிந்தததால் சிறப்பு தொழுகை செய்து வந்தனர். மேலும், நாளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஷரியத் அமைப்பு தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் “இன்று மாலை ஷாவ்வால் மாத பிறை நாகூர் மற்றும் பல்வேறு இடங்களில் காணப்பட்டது. ஆகையால் நாளை ஷாவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்படுகிறது. ஆகையால் ‘ஈதுல் பித்ர்’ (ரம்ஜான் பண்டிகை) நாளை கொண்டாடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.