Kamal Haasan – ரஜினி – லோகேஷ் கனகராஜ் இணையும் படம்.. உள்ளே புகுந்த கமல்.. என்ன நடக்கப்போகிறது?

சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) ரஜினிகாந்த்தும், லோகேஷ் கனகராஜும் இணையும் படத்திற்கு கமல் ஹாசன் போட்டிப்போடுவதாக கோலிவுட்டில் புதிய தகவல் ஒன்று உலாவிவருகிறது.

லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குநராக இருக்கிறார். இதுவரை அவர் எடுத்த நான்கு படங்களும் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக மாஸ்டர் படமும், விக்ரம் படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தன. அதிலும் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டராகி லோகேஷ் கனகராஜின் க்ராஃபை உச்சத்துக்கு கொண்டு போய் நிறுத்தியது. இதனால் அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற நடிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்திருக்கிறது.

லியோ லோகேஷ் கனகராஜ்: லோகேஷ் இப்போது விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோரை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். படத்தின் 60 நாள்கள் ஷூட்டிங் சமீபத்தில் காஷ்மீரில் நடந்து முடிந்தது. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு நடந்துவந்த ஷூட்டிங் இப்போது பையனூரில் நடந்துவருகிறது. அங்கு விஜய்க்கும், சஞ்சய் தத்துக்குமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுவதாக ஒரு தகவல்.

அடுத்தது என்ன?: கோலிவுட்டில் இப்போது எழுதிருக்கும் மில்லியன் டாலர் கேள்விகளில் ஒன்று லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்பதுதான். ஏற்கனவே லியோ படத்தை முடித்துவிட்டு கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தொடங்கவிருக்கிறார் என கருதப்பட்டது. கைதி ப்ளாக் பஸ்டர் படம் என்பதால் அதன் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ரொம்பவே ஆவலோடு இருக்கின்றனர்.

ரஜினியுடன் இணையும் லோகேஷ்: இதற்கிடையே கடந்த சில வாரங்களாக கோலிவுட்டில் ஒரு தகவல் பரவிவருகிறது. அதாவது கைதி 2 படத்திற்கு முன்னதாக ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்கப்போகிறார் என்பதுதான் அது. ஆனால் கைதி 2 படத்துக்கு ஏற்கனவே எஸ்.ஆர்.பிரபுவிடம் லோகேஷ் கமிட்டாகியிருப்பதால் அந்தப் படத்தின் ஷூட்டிங்கைத்தான் முதலில் தொடங்குவார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. கைதி 2 எடுத்தாலும் ரஜினியுடன் அவர் இணையும் படம் உறுதி என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

Kamal Haasan Will Produce tha Rajini - Lokesh Kanagaraj Movie

போட்டிப்போடும் நிறுவனங்கள்: ரஜினியுடன் லோகேஷ் இணையும் படத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் போட்டிப்போடுவதாக கூறப்படுகிறது. அதன்படி, கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ், புஷ்பா, வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ், வாரிசு படத்தை தயாரித்த வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தமிழில் இருந்து சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ரேஸில் இருக்கின்றன. இதனால் லோகேஷின் சம்பளம் ரஜினியின் படத்துக்கு 50 கோடி ரூபாயை நெருங்கும் என கூறப்படுகிறது.

ரேஸில் இறங்கிய கமல் ஹாசன்: இந்நிலையில் இந்தப் படத்தை கைப்பற்ற கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் ரேஸில் குதித்திருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ரஜினியும் லோகேஷும் இணைய வாய்ப்பிருப்பதாக விக்ரம் படம் சமயத்திலேயே பேசப்பட்டது. அதனை ராஜ்கமல் நிறுவனம்தான் தயாரிக்கும் எனவும் கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் பல நிறுவனங்கள் போட்டிப்போடுவதை பார்க்கும்போது ஏன் நாமும் இதில் இறங்கக்கூடாது என முடிவெடுத்து கமல் ஹாசன் இறங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி சிம்பு, சிவகார்த்திகேயன் படங்கள் ராஜ்கமல் தயாரிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளது. எனவே எப்படியும் ரஜினிக்கும் தனக்கும் இருக்கும் நட்பு, லோகேஷ் கனகராஜ் தன் மீது வைத்திருக்கும் மரியாதை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி படத்தை கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் கமல் ஹாசன் இருக்கிறார் என்கின்றனர் கோலிவுட்டினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.