இயக்குநர் பாலாவை பற்றி தவறாக சொன்னேனா? – காயத்ரி கிருஷ்ணன் விளக்கம்

அயலி வலைதொடரின் மூலம் கவனம் ஈர்த்த காயத்ரி கிருஷ்ணன், சின்னத்திரையிலும் எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான காயத்ரிக்கு தற்போது பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்துள்ளது. இடையிடையே ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அவ்வாறாக சமீபத்திய பேட்டி ஒன்றில் காயத்ரியிடம் 'நிஜ வாழ்வில் குணசேகரன் யார்?' என்று கேள்வி கேட்கபட்டதாகவும், அதற்கு இயக்குநர் பாலா குணசேகரனை விட மோசமான ஆள் என்று காயத்ரி சொன்னதாகவும் செய்தி வெளியானது. அதேசமயம் காயத்ரி கிருஷ்ணன் யூ-டியூப் சேனல்களுக்கு அளித்த பல பேட்டிகளில் அவர் இயக்குநர் பாலாவுடன் ஒரு படம் நடித்தால் கூட போதும் என்ற அளவுக்கு பாலாவை உயர்வாக பேசியிருந்தார். எனவே, இதுகுறித்து அவரிடமே கேட்ட போது, 'நான் பாலாவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன். அதுமட்டுமே உண்மை. இயக்குநர் பாலாவை பற்றி நான் பேசியதாக பரவும் மற்ற செய்திகள் போலியானவையே' என்று விளக்கமளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.