கிருஷ்ணகிரியில் சோகம் : குரூப் தேர்வில் தொடர்ந்து தோல்வி – மன உளைச்சலில் பிள்ளைகளுடன் பெண் தற்கொலை.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அடுத்த கோழிநாய்க்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குணசேகரன்-தெய்வா தம்பதியினர். இவர்களுக்கு இரணியா என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் தெய்வா குரூப் தேர்விற்கு வீட்டிலிருந்த படியே படித்து தேர்வெழுதி வந்துள்ளார். ஆனால், அவர் தேர்வில் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்ததால், குடும்பத்தாருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த, தெய்வா தன் பிள்ளைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தேர்வில் தோல்வியடைந்ததால், பெண் ஒருவர் பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.