இடுக்கி : கொச்சி – தேசிய நெடுஞ்சாலையில், தொண்டிமலை அருகே சுற்றுலா வேன் ஒன்று, இன்று (ஏப்.,22)ம் தேதி கவிழ்ந்த விபத்தில், ஒரு குழந்தை உட்பட, மூன்று பேர் உயிரிழந்தனர். நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து கேரளா மாநிலம், மூணாறு நோக்கி, கொச்சி – தனுஷ்கோடி சாலையில், 20 பேருடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ், போடிமெட்டு அடுத்த தொண்டிமலை அருகே சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில், திருநெல்வேலியைச் சேர்ந்த வள்ளியம்மாள், 70, பெருமாள், 59 மற்றும் எட்டு வயது சிறுவன் ஒருவன், ஆகியோர் பலியாகினர். நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்வர்களுக்கு, ராஜகுமாரி பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்கள், திருநெல்வேலியில் இருந்து திருமண விருந்துக்கு சென்றபோது, விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement