டென்ஷன் ஏறுது… பிடிஆர் மீது நடவடிக்கை எடுக்கலாமா வேணாமா.! பரபர பேச்சுக்கள்..!

”பத்து ஆண்டுகளுக்கு பிறகு

ஆட்சிக்கு வந்துள்ளதால் எப்படியாவது நல்லாட்சி என்று மக்கள் மனதில் இடம் பிடித்துக்கொள்ளவேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், வார்டு கவுன்சிலர்கள் முதல் அமைச்சர்கள் வரை அடுத்த பல ஆண்டுகளுக்கு தேவையானதை சம்பாதித்துக்கொள்வதில் குறியாக இருக்கிறார்கள்” என்று நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் கூறினார்.

அதனை உறுதி செய்யும் விதமாக சில விஷயங்கள் திமுகவை சுற்றி நடப்பதாகவே தெரிகிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி நிருபரிடம் பேசிய ஆடியோ ஒன்று இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் ”உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அவர்களது முன்னோர்கள்கூட சம்பாதிக்காத தொகையை ஒரே ஆண்டில் சம்பாதித்துள்ளனர்.

அந்த பணத்தை எப்படி வைத்திருப்பது என்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 10 கோடி 20 கோடின்னு சுமார் 30 ஆயிரம் கோடியை சம்பாதித்துள்ளனர்” என்று பிடிஆர் கலக்கமாக பேசியுள்ளார். அந்த பேச்சு இப்போது பொதுமக்கள் மத்தியில் வெளியாகியிருப்பது திமுக அரசுக்கும் பிடிஆருக்கும் சங்கடமான நிலையை கொடுத்துள்ளது. அந்த வீடியோ வெளியாகி இரண்டு நாட்கள் ஆகியும் அது என்னுடைய குரல் அல்ல என்று பிடிஆர் மறுப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்.

கைபேசியை விட ,நூலில் படிப்பதே சிறந்த முறை!- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

திமுகவினரும் அதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். ஒருவேளை அது உண்மையாக இருந்தால் முதல்வர் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் இல்லையென்றால் இதுபோன்று பல அமைச்சர்கள் நாளைக்கு பேச தொடங்குவார்கள் என்ற அச்சம் திமுக தலைமைக்கு வந்துவிட்டது.

அதே சமயம் பிடிஆர் மீது நடவடிக்கை எடுத்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவந்துவிடுமோ என்ற பயமும் தலைமையை வாட்டி எடுத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் சொல்கின்றனர். ஏற்கனவே பிடிஆர் மதுக்கடைகளை குறித்தும் கூட்டுறவுத்துறை குறித்தும் விமர்சித்து சிக்கலில் மாட்டிக்கொண்ட நிலையில் இப்போது கட்சி தலைமை மீதே கை வைத்துள்ளார். எனவே, பிடிஆர் அதிருப்தி நிர்வாகிகள் தலைமையிடம் ” என்னங்க தலைவரே இப்படியே விட்டா எப்படி-ன்னு” சொல்லி உசுப்பு ஏத்தினாலும் ஆச்சரியம் இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.