தெருநாய்கள் கடித்து சிறுவன் படுகாயம்; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வைரல்

கோலார் தங்கவயல்:

தெருநாய்கள் கடித்து குதறியது

கோலார் டவுன் ரகமத் நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ஜாபர் (வயது 9). இவன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு 7 தெருநாய்கள் வந்துள்ளன. திடீரென்று அந்த தெருநாய்கள் ஜாபரை பார்த்து குரைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாபர், அங்கிருந்து ஓட முயன்றான்.

ஆனாலும் தெருநாய்கள் அவனை சுற்றி வளைத்து குடித்து கதறின. இதனால் வலியால் ஜாபர் கதறி துடித்தான். அப்போது அந்த வழியாக ேராந்து வந்த போலீசார், சிறுவனை நாய்கள் கடித்து குதறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் மீட்டனர்

பின்னர் அவர்கள் விரைந்து வந்து தெருநாய்களை விரட்டியடித்து சிறுவன் ஜாபரை மீட்டனர். தெருநாய்கள் கடித்து குதறியதில் ரத்த வெள்ளத்தில் சிறுவன் ஜாபர் உயிருக்கு போராடினான். அவனை போலீசார் மீட்டு ஜாலப்பா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜாபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவன் ஜாபரை, ரத்த வெள்ளத்தில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் அடைந்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் ஜாபர் சிகிச்சை பெற்று வருகிறான். இதற்கிடையே தெருநாய் கடித்து குதறி சிறுவன் ஜாபர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது பற்றி அறிந்ததும், அவனது பெற்றோர் விரைந்து வந்தனர்.

நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

மேலும், சிறுவன் ஜாபரை தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் நெஞ்சை பதற வைக்கும் வகையில் இருந்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து கோலார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், தெருநாய்களின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நகரசபைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.