தோனிக்கு கை கொடுக்க மறுத்த தமிழக வீரர் நடராஜனின் மகள்! வைரலாகும் செல்லமாக உரையாடிய வீடியோ


தமிழக வீரர் நடராஜனின் பெண் குழந்தையுடன் தோனி விளையாட்டாக உரையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

CSK வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடவில்லை. எனினும், அவர் தனது குடும்பத்துடன் மைதானத்திற்கு வந்திருந்தார்.

நடராஜன் குடும்பத்தை சந்தித்த தோனி

போட்டி முடிந்ததும் நடராஜனின் குடும்பத்தை சந்தித்த தோனி, அவரது மகளிடம் கை கொடுத்து தன்னை அறிமுகம் செய்ய முனைந்தார்.

ஆனால், கை கொடுக்காமல் குழந்தை விளையாடியதை புரிந்துகொண்ட தோனி சிறிது நேரம் உரையாடிய பின்னர் நடராஜன் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்த இருவரது ரசிகர்களும் சிலாகித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.    

தோனிக்கு கை கொடுக்க மறுத்த தமிழக வீரர் நடராஜனின் மகள்! வைரலாகும் செல்லமாக உரையாடிய வீடியோ | Dhoni Met Natarajan Daughter Viral Video @ChennaiIPL



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.