வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டவா:கனடாவில் ஆண் எம்.பிக்கள் பிங்க் நிற ஹை ஹீல்ஸ் அணிந்து நடத்தி பிரசாரம் சமூக வலை தளங்களில் வைரலானது.
![]() |
கனடாவில் பெண்கள் தங்குமிடத்திற்கு நிதியை திரட்டுவது பாலின அடிப்படையில் வன்முறை குறித்து ஆண்களும், சிறுவர்களும் அறிந்து கொள்வதை நோக்கமாக கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளாக ஹோப் இன் ஹை ஹீல்ஸ் பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநாளை கொண்டாடும் வகையில் கனடா நாட்டின் ஆண் எம்.பிக்களில் ஒரு சிலர் பெண்களின் அடையாளமாக காணப்படும் நிறமான பிங்க் நிறத்தில் கட் ஷூ அணிந்து பிரசாரத்தை மேற்கொண்டனர். இது குறித்து கனடா அமைச்சர்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்கு கொண்டுவ வருவத நம்முடைய பொறுப்புக்களாகும் என்ற விதத்தில் பதிவிட்டு உள்ளனர்.
எம்.பிக்களின் பிங்க் நிற ஷூ பேரணி பல்வேறு கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. ஒரு சிலர் எம்.பிக்களின் நடவடிக்கைகள் பாராட்டும்படி இருப்பதாகவும், ஒரு சிலர் இது போன்ற நடவடிக்கை ஒரு போதும் தீர்வை தராது என காட்டமான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.
![]() |
கனடாவில் திருநங்கை ஒருவரை தங்குமிடம் ஒன்றில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு “ஹோப் இன் ஹை ஹீல்ஸ்” நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement