மக்களோடு மக்களாய் மகனுடன் கூட்டுத்தொழுகையில் ஈடுபட்ட மம்முட்டி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. இவரது மகனான துல்கர் சல்மானும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இருவருமே சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றனர். அதிலும் துல்கர் பன்மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் மம்முட்டியின் தாயாரான பாத்திமா இஸ்மாயில்(93) வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் நேற்று காலமானார். நேற்று மாலையே அவரது இறுதிச்சடங்கும் நடந்தது. மலையாள திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். பல பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் உலகம் முழுக்க ரம்ஜான் பண்டிகை இன்று(ஏப்., 21) கோலாகலமாய் கொண்டாடப்படுகிறது. இஸ்லாம் மதத்தை சேர்ந்த மம்முட்டி ரம்ஜானை முன்னிட்டு தனது மகன் துல்கர் உடன் கொச்சியில் நடந்த பிரமாண்ட கூட்டுத்தொழுகை நிகழ்ச்சியில் மக்களோடு மக்களாய் பங்கேற்றார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாகின.
மம்முட்டிக்கு கமல் ஆறுதல்
இதனிடையே மறைந்த மம்முட்டியின் தாயார் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவு : “மம்முட்டியின் தாயார் மறைவு குறித்து கேள்விப்பட்டேன். நீங்கள் அடைந்த உயரத்தை காண உங்கள் தாய் இருந்தது உங்கள் அதிர்ஷ்டம். அவர் மிகுந்த திருப்தியுடன் கிளம்பியிருப்பார். காலம்தான் உங்களின் வலியை ஆற்றும். உங்களின் கவலையை பகிர்ந்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.