15 மாவட்டங்களில் கனமழை: சட்டென்று மாறுது வானிலை! – வெயில் கொடுமையிலிருந்து விடுதலை!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நவகுடியில் மழை வேண்டியும் விவசாயம் தழைக்கவும் வேண்டி 5 வருடத்திற்கு பிறகு மீன்பிடித் திருவிழா

அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக, இன்று (ஏப்ரல் 22) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
கனமழை
பெய்யவாய்ப்புள்ளது.

24.04.2023 மற்றும் 25.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

22.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

போடிநாயக்கனூர் (தேனி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 4, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாலவிதிதி (கரூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 3, காக்காச்சி (திருநெல்வேலி), விராலிமலை (புதுக்கோட்டை), மதுரை தெற்கு (மதுரை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), திருநெல்வேலி, திருநெல்வேலி, சாத்தூர் (விருதுநகர்), காட்பாடி (வேலூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 2, வீரபாண்டி (தேனி), அன்னூர் (கோயம்புத்தூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி). மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), காங்கேயம் (திருப்பூர்), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), உதகமண்டலம் (நீலகிரி), தேக்கடி (தேனி), தல்லாகுளம் (மதுரை), சென்னிமலை (ஈரோடு), காங்கேயம் (திருப்பூர்) தலா 1.

வெப்பநிலை பற்றிய குறிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை: கரூர் பரமத்தியில் 41.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn heavy rain, Tamil Nadu weather, chennai weather, chenai met, சென்னை வானிலை,
தமிழ்நாடு மழை
, கனமழை, மிதமான மழை,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.