சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்வித் கோமாளி நிகழ்ச்சி அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக உள்ளது.
இதில் ஏற்கனவே மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் நான்காவது சீசன் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
குக் வித் கோமாளி 4:கடந்த மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக மாறி உள்ளார். கடும் முயற்சி செய்து ஒவ்வொரு டிஷ்சையும் சிறப்பாக செய்து பாராட்டை பெற்று வருகிறார். இதனால் இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கிக்கு விஜய் டிவி சோம்பு தூக்குவதாகக்கூட பேச்சுக்கள் அடிபட்டன. அதே போல குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய கிஷோர் ராஜ்குமார், ஷிவாங்கியை வெளியே அனுப்பாமல் தன்னை வெளியே அனுப்பி விட்டதாக தகவல் பரவியது. ஆனால், அது உண்மை இல்லை என கிஷோர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
கண்கலங்கிய ஷிவாங்கி:இதையடுத்து, கடந்த வார எபிசோடில், ஒருவர் தேர்ந்தெடுத்த பொருட்கள், சீட்டுக் குலுக்கல் மூலம் மற்ற போட்டியாளர்களுக்கு சென்றது. அப்போது ஷிவாங்கிக்கு பாகற்காய் வந்தது. பாகற்காய் சமைத்தால் நான் தோற்றுவிடுவேன். இதனால், நான் சமைக்க மாட்டேன் நேரடியாக எலிமினேஷனுக்கு போய்விடுகிறேன் என்று கூறினார்.

ஷிவாங்கியின் பேச்சால் கடுப்பான நடுவர்கள். இதுதான் கேம், இதுதான் விதி முறை, சமைத்துத்தான் ஆகவேண்டும் என்று சொன்னதால் ஷிவாங்கி கண்கலங்கினார். இதனால், ஷிவாங்கி இவர் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து விலகி விடுவார் என்று வதந்தி பரவியது.
வெளியேறி போட்டியாளர்:இதையடுத்து, இந்த வாரம் ஷிவாங்கி, ஸ்ருடி,ஷெரின் ஆகியோர் டேன்ஜர் ஜோனில் இருக்கின்றனர். இதில், இவர்களுக்கு இந்த வாரம் நான் வெஜ் சமைக்கும் டாஸ் கொடுக்கப்படுகிறது. இதில் யாரும் நான் வெஜ் சமைக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது, அனைவரும் சமைத்துத்தான் ஆகவேண்டும் என்றார் தாமு. இதில், இந்த வாரம் ஷெரின் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் ஷெரின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

போட்டியாளர்கள் விவரம்:குக் வித் கோமாளி சீசன் 4ல் இருந்து இதுவரை ஷால், ராஜ் அய்யப்பா, காளையன் மற்றும் கிஷோர் ராஜ்குமார் ஆகியோர் வெளியேறி உள்ளனர். மீதம் மீதமுள்ள போட்டியாளர்கள் மைம் கோபி, விசித்ரா, சிவாங்கி கிருஷ்ணகுமார், ஆண்ட்ரியான் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே உள்ளனர். கோமாளிகளாக புகழ், சுனிதா, ஜி.பி.முத்து, ரவீனா, குறைஷி, டைகர் தங்கதுரை, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளெஸ்ஸி, சில்மிஷம் சிவா உள்ளிட்டோர் உள்ளனர்.