Maaveeran Release Date – சிவகார்த்திகேயன் ஃபேன்ஸுக்கு ஹேப்பி நியூஸ்.. அறிவிக்கப்பட்டது மாவீரன் ரிலீஸ் தேதி

சென்னை: Maaveeran Release Date (மாவீரன் ரிலீஸ் தேதி) சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். கேரியரை ஸ்டார்ட் செய்தபோது சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என கருதப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமைகளை வளர்த்து நூறு கோடி வசூலிக்கும் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். விஜய்க்கு எப்படி சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர்களாக இருக்கின்றனரோ அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கின்றனர். அதற்கேற்றபடிதான் அவரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

மிஸ் ஆன பிரின்ஸ்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்த டாக்டர், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்த டான் ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதனால் படு உற்சாகத்தோடு காணப்பட்டார் சிவகார்த்திகேயன். அவரது உற்சாகத்தை ஒட்டுமொத்தமாக காலி செய்யும் விதமாக அமைந்தது பிரின்ஸ் திரைப்படம். பைலிங்குவலாக உருவான அந்தப் படத்தை அனூதீப் இயக்கியிருந்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது.

Sivakarthikeyans Maaveeran Movie Release Date Was Announced

சுதாரித்துக்கொண்ட சிவா: பிரின்ஸ் கொடுத்த தோல்வியை சிவகார்த்திகேயனே எதிர்பார்த்திருக்கமாட்டார். இதனால் சுதாரித்துக்கொண்ட அவர் அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துவருகிறார். மடோன் அஸ்வின் மண்டேலா படத்தை இயக்கியவர். அந்தப் படத்தில் யோகி பாபு நடித்திருந்தார். படம் மெகா ஹிட்டாகி தேசிய விருதையும் வென்றது. இதனால் மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

வெற்றி கட்டாயம்: இரண்டு படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாய் வசூலித்தாலும் பிரின்ஸ் கொடுத்த மரண அடி சிவகார்த்திகேயனையும், அவரது ரசிகர்களையும் கொஞ்சம் ஆட்டம் காண வைத்ததாகவே கூறப்படுகிறது. எனவே மாவீரன் படமும் தோல்வியடைந்தால் கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதால் இந்தப் படத்தின் மூலம் ஒரு வெற்றி அவருக்கு கட்டாயமாகி இருக்கிறது. எனவே சிவகார்த்திகேயன் ஒட்டுமொத்த கவனத்தையும் மாவீரனில் வைத்து உழைத்திருக்கிறார்.

Sivakarthikeyans Maaveeran Movie Release Date Was Announced

ரிலீஸ் தேதி: படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்த சூழலில் சமீபத்தில் அதன் ஷூட்டிங் முடிவடைந்தது. ஆனால் படம் எப்போது ரிலீஸாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் அதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

அதன்படி படமானது ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டிருக்கிறது. இதற்கிடையே மாவீரன் படத்தில் கமல் ஹாசன் வாய்ஸ் கொடுக்கவிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது.

அடுத்த படம்: மாவீரன் படத்துக்கு பிறகு ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீர் உள்ளிட்ட படங்களில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.