Meena: 'அம்மா பத்தி தப்பா பேசாதீங்க'… மீனாவின் மகள் நைனிகா உருக்கமான வேண்டுகோள்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
தனது அம்மாவை பற்றி தவறாக பேச வேண்டாம் என நடிகை மீனாவின் மகள் நைனிகா உருக்கமாக பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

உச்ச நடிகைதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் உச்ச நடிகையாக சாதித்தவர் நடிகை மீனா. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மற்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய், சரத்குமார், சத்யராஜ், பிரபு என பல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் நடிகை மீனா.
​உஷாரான அதிதி ஷங்கர்!​
கணவர் மரணம்தற்போதும் சினிமாவில் ஆக்டிவாக உள்ள நடிகை மீனா, தனக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து மன உளைச்சலுக்கு ஆளான நடிகை மீனாவை அவரது தோழிகள் தான் தேற்றி சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர்.
​Nayanthara: கேரள புடவையில் கணவருடன் கலக்கலாய் விஷு கொண்டாடிய நயன்தாரா!​
மீனா 40இந்நிலையில சினிமாத்துறையில் 40 ஆண்டுகளை கடந்துள்ள நடிகை மீனாவுக்கு தனியார் யூட்யூப் சேனல் ஒன்று சமீபத்தில் மீனா 40 என விழா எடுத்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், போனி கபூர், பிரசன்னா, சதீஷ், ஜீவா, குஷ்பு, ரோஜா, ராதிகா, சங்கீதா, சங்கவி, தேவயானி, ஆர்கே செல்வமணி, இசையமைப்பாளர் தேவா என பலர் பங்கேற்றனர்.
​Kizhakku Vasal: கிழக்கு வாசல் சீரியலில் இருந்து நீக்கப்பட்ட சஞ்சீவ்… இதுதான் காரணமா?​
நைனிகா வீடியோஇதில் பங்கேற்ற ரஜினிகாந்த் மீனா குறித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது மீனாவின் மகள் நைனிகா மீனா குறித்து பேசிய சர்ப்ரைஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பேசிய நைனிகா, ஒரு பெண்ணாக சினிமாவில் 40 ஆண்டுகள் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. தனது அம்மா குழந்தை நட்சத்திரமாகவும் ஹீரோயினாகவும் சாதித்துள்ளார் என கூறியுள்ளார்.​Actor: ஸ்ட்ரிக்ட் இயக்குநரிடம் சிக்கித் தவிக்கும் வாரிசு நடிகர்!​
அப்பா இறந்த பிறகுமேலும் தனது அம்மா சின்சியாரானவர், கடின உழைப்பாளி என்றும் கூறியுள்ளார் நைனிகா. தனது அப்பா இறந்த பிறகு தனது அம்மா மன வேதனையில் பல முறை அழுததாகவும், தனக்கு தெரியாமல் அழுததாகவும் தெரிவித்த நைனிகா, நான் உங்களை சந்தோஷமாக பார்த்துக் கொள்கிறேன் அம்மா என்று கூறினார். அம்மாவுக்கு தேவையான அனைத்தையும் செய்வேன் என்றும், இப்போது முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் அம்மாவை நல்லபடியாக பார்த்துக்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.
​Ponniyin Selvan 2: நான் மணிரத்னத்தின் குந்தவை.. கல்கிக்கு நன்றி.. பெருமையுடன் சொன்ன த்ரிஷா!​
தப்பா பேசாதீங்கமேலும் பல நியூஸ் சேனல்களில் தனது அம்மா குறித்து தவறான செய்திகள் வருவதாகவும், தன்னுடைய அம்மா பற்றி தவறாக பேச வேண்டாம் என்றும் கூறினார் நைனிகா. தன்னுடைய அம்மா ஒரு ஹீரோயினாக இருக்கலாம், ஆனால் அவரும் ஒரு ஹியூமன்தான் , அவருக்கும் ஃபீலிங்ஸ் உண்டு. ஆகையால் அவரைப் பற்றி தவறாக பேச வேண்டாம் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார் நைனிகா. நைனிகா பேசிய இந்த வீடியோ மீனா வீட்டில் இல்லாத போது கலா மாஸ்டர் உதவியுடன் எடுக்கப்பட்டுள்ளது. நைனிகா பேசியதை கேட்டு மீனா மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் கலங்கினர்.
​Kangana Ranaut: விராட் கோலி மகளை டேட்டிங் அழைத்த சிறுவன்… பெற்றோரை விளாசிவிட்ட கங்கனா ரனாவத்!​
Nainika request

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.