Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் படத்திற்காக ஜெயராம் பெற்ற சம்பளம்… இவ்வளவுதானா?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக நடிகர் ஜெயராம் மற்றும் நடிகர் பிரபு பெற்ற சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

பொன்னியின் செல்வன்சோழர் வரலாற்றுறை கூறும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் என்ற அதே பெயரில் இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சாதனை படைத்தது பொன்னியின் செல்வன் திரைப்படம்.
​https://tamil.samayam.com/photogallery/kollywood/actress/actress-meenas-latest-clicks/photoshow/99645437.cms​
பெரிய பட்ஜெட்குறிப்பாக பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்களின் தேர்வு அருமை என இயக்குநர் மணிரத்னத்தை புகழ்ந்து வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனை முன்னிட்டு இப்படத்திற்கான விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு மேல் உருவாகியுள்ளது.​Nayanthara: நயன்தாரா நடிக்கும் ஜவான் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடிகளா!​
பிரபு சம்பளம்இந்நிலையில் இப்படத்தில் நடிகர் பிரபு மற்றும் நடிகர் ஜெயராம் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பிரபு அநிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சோழ நாட்டிற்கும், சோழ இளவரசன் அருண் மொழி வர்மனுக்கும் முக்கிய ஆலோசனைகளை வழங்குபவர்தான் அநிருத்த பிரம்மராயர்.
​கணவர் மரணத்திற்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்கும் மீனா!​
ஜெயராம் சம்பளம்அநிருத்த பிரம்மராயர் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் பிரபுவுக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் பொன்னியின் செல்வன் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் ஜெயராம் இந்த படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பியாக நடித்திருப்பார். பொன்னியின் செல்வனில் இது கற்பனை கதாபாத்திரம்தான். இருந்தபோதும் கதைக்கு அதிக சுவாரஸ்யத்தை கொடுக்கும் கதாப்பாத்திரம் இந்த நம்பி கதாப்பாத்திரம்.
​Karthi: ஒரே வசனத்தில் பொன்னியின் செல்வன் கதையை சொன்ன ஜெயமோகன்… கார்த்தி பகிர்ந்த ரகசியம்!​
நட்சத்திர பட்டாளம்நம்பி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ஜெயராமுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்தே இந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும். பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
​Ponniyin Selvan 2: வந்தியதேவன் நாட்டில் காதல் துறை அமைச்சர், பேரழகு துறை அமைச்சர் இவர்கள்தான்… கலகலத்த கார்த்தி!​
Jayaram Salary Ponniyin Selvan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.