சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது அட்லி -ஷாருக்கான் கூட்டணியில் உருவாகிவரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. கத்ரினா கையிப்புடனும் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விடுதலை படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கேரக்டர், கேரியர் பெஸ்ட்டாக அமைந்துள்ளது.
விஜய் சேதுபதியுடன் மல்லுக்கட்டும் பாலிவுட் இயக்குநர் : நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வனாக ரசிகர்களை கவர்ந்து வருபவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விடுதலை படம், கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. ஒவ்வொரு படத்தையும் அதன் சிறப்பான வெர்ஷனை கொடுக்கும் முயற்சியில் மிகுந்த மெனக்கெட்டு வருகிறார் விஜய் சேதுபதி. அதுபோலத்தான் இந்தப் படத்தின் பெருமாள் வாத்தியார் கேரக்டரும் அவருக்கு சிறப்பாக அமைந்தது. அவரை போலவே இந்தப் படத்தில் ஹீரோவாக களமிறங்கிய சூரிக்கும் இந்தப் படம் மிகச்சிறப்பாக கைக்கொடுத்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் அடுத்த பாகம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன் என ஒவ்வொரு கேரக்டர்களும் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன. சில துணை கேரக்டர்களில் நடித்ததன்மூலம் தன்னுடைய கேரியரை துவங்கிய விஜய் சேதுபதிக்கு தென் மேற்கு பருவக்காற்று சிறப்பான என்ட்ரியை தமிழில் கொடுத்தது.
தொடர்ந்து தன்னுடைய கேரக்டருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அனைவரையும் கவர்ந்தார் விஜய் சேதுபதி. இதில் வயதான கேரக்டர் என பல கேரக்டர்களை பார்க்க முடிந்தது. தொடர்ந்து மாமனிதன், விக்ரம், பார்சி வெப் தொடர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. தற்போது இவரது 50வது படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
தற்போது அட்லி -ஷாருக்கான் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் படத்தின் வில்லனாக மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தை தொடர்ந்து காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைகார் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து மணிகண்டனின் வெப் தொடர் ஒன்றிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தனது 50வது படத்தையும் ஓகே செய்துள்ளார் விஜய் சேதுபதி. மிகக்குறுகிய காலத்திலேயே இவர் 50வது படத்தில் கமிட்டாகியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டில் விதார்த், பாரதிராஜா நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தன்னுடைய 50வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்திற்கு மகாராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், படத்தின் வில்லன் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மகாராஜா படத்தின் வில்லனாக கமிட்டாகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் இருவரும் முன்னதாக நயன்தாரா -விஜய் சேதுபதி -அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் வில்லனாக களமிறங்கியிருந்தார். அந்தப் படத்தில் அவர் நேரடியான வில்லன் இல்லை என்ற போதிலும், வில்லனாக மிரட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் விஜய் சேதுபதியின் வில்லனாக அவர் மகாராஜா படத்தின்மூலம் இணையவுள்ளார். குரங்கு பொம்மை மூலம் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்த நித்திலன் சுவாமிநாதன், இந்தப் படத்தில் எத்தகைய கதைக்களத்தை கையில் எடுப்பார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.