அடச்சீ.. இப்படியும் ஒரு போட்டியா.. அதுவும் டீச்சரும் ஸ்டூடண்டும்.. கருமம் கருமம்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் நக்கி கொள்ளும் போட்டி அமெரிக்காவில் நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன்

அமெரிக்காவில் தொடர்ந்து பாலியல் விவகாரங்களில் பள்ளி ஆசிரியர்கள் சிக்கி வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுடன் உடலுறவு கொண்டதற்காக 6 ஆசிரியைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் கென்ட்டக்கி மாகாணத்தில் உள்ள உட்லான் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த சூழலில், எல்லன் ஷெல் என்ற ஆசிரியை, இரண்டு மாணவர்களுடன் பள்ளியிலேயே உடலுறவு வைத்துக் கொண்டது தெரியவரவே அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஓராண்டாக பல மாணவர்களுடன் இந்த கேடு கெட்ட செயலில் ஈடுபட்டது தெரியவரவே, அமெரிக்க பெற்றோர்கள் கொந்தளித்தனர்.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக பல ஆசிரியைகள் வரிசையாக கைது செய்யப்பட்டனர். அதன்படி 2 நாட்களில் மட்டும் 6 ஆசிரியைகள், மணவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் மேலும் ஒரு சர்ச்சை அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கென்னிவிக்கில் உள்ள டெசர்ட் ஹில்ஸ் என்ற நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நடந்த விநோத போட்டி தான் தற்போது பெற்றோர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுநிலைப் பள்ளி மாணவர்களும் அவர்களது ஆசிரியர்களும், கண்ணாடி திரையின் எதிரெதிர் பக்கங்களில் நின்று கொண்டு, ஒருவரை ஒருவர் நக்குவது தான் போட்டி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாது.

மாணவர்களும் ஆசிரியர்களும் மாறி மாறி கண்ணாடியை நோக்கி ஓடிவந்து நக்கும்போது, மாணவர்கள் கூச்சலிடுவதையும் ஆரவாரம் செய்வதையும் வீடியோ காட்டுகிறது. கடந்த மார்ச் 31 அன்று இந்த நக்கும் போட்டி நடந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

‘டீன் ஏஜ்’ மாணவர்களுடன் பள்ளியிலேயே ‘செக்ஸ்’.. கையும் களவுமாக சிக்கிய 6 ஆசிரியைகள்.. அதிர்ச்சியில் அமெரிக்கா!

மிகவும் பொருத்தமற்ற மற்றும் பாலியல் சார்ந்த போட்டியை நடத்தியதற்காக பள்ளி நிர்வாகத்தை நெட்டிசன்கள் விமர்சித்தனர். ‘ஐயோ இது அருவருப்பானது. என்ன கொடுமை இது.. என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை’ என்று மாணவியின் தாயார் ஒருவர் தெரிவித்தார். வீடியோ வைரலானதை தொடர்ந்து, பல பெற்றோர்கள் பள்ளி அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் விளக்கம் கோரினர். அதைத் தொடர்ந்து நிகழ்வு எப்படி அல்லது ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.