மே மாதம் 15ஆம் திகதிக்குள் பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுவரை 80ம% பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மே மாதம் 15ம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம்.
அத்துடன், தற்போது 85% சீருடைகள் விநியேகிக்கப்பட்டுள்ள அதேவேளை, மீதமுள்ள சீருடைகளை மே மாதம் 15ம் திகதிக்குள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.