#வன்னியர் உள்ஒதுக்கீடு | மணமேடையில் முதல்வருக்கு கடிதம் எழுதிய மணமக்கள்!

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூக படிநிலையிலும் பல நூற்றாண்டுகளாக மிக, மிக பின்தங்கிக் கிடக்கும் வன்னியர் சமுதாயம் முன்னேற, வருகின்ற மே 31-க்குள் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகள், அனைத்து அமைப்புகளைச் சேர்ந்த வன்னியர்களும், சமூகநீதியில் அக்கறை கொண்ட பிற சமூகத்தினரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வீ.பாரதிதாசன் அவர்களுக்கும் கடிதம் எழுத வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து, வன்னியர் மட்டுமில்லாமல் பலதரப்பட்ட மக்களும், வருகின்ற மே 31-க்குள் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்ற வலியுறுத்தி முதல்வருக்கும், நீதியரசர் வீ.பாரதிதாசனுக்கும் கடிதம் எழுதி வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரத்தில் திருமணம் முடிந்த கையேடு மணமேடையில் வைத்தே முதல்வருக்கு மணமக்கள் கடிதம் எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு 10.5% வழங்கக்கோரி மருத்துவர். அன்புமணி ராமதாஸ் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்று விழுப்புரம் பாட்டாளி சமூக ஊடகப்பேரவை மாவட்ட செயலாளர் புதுமணத்தம்பதி மதன் விவே – தீபிகா இணையர் தமிழக முதல்வருக்கும், நீதியரசருக்கும் கடிதம் எழுதி மண விழாவை உணர்வுமிக்க விழிப்புணர்வு நிகழ்வாக மாற்றியமைத்து உள்ளனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் விழுப்புரம் பாமக மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் பாலசக்தி, பாமக செய்தி தொடர்பாளர் வினோபா  பூபதி, மாவட்ட மாணவரணி செயலாளர் பால ஆனந்த் முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.