`வியாபாரம் செழிக்கும்; தொழில்நுட்பம் பெருகும்' குருப்பெயர்ச்சி 2023 பொதுபலன்கள் கே.பி.வித்யாதரன்

நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் நேற்று சித்திரை மாதம் 9-ம் தேதி சனிக்கிழமை (22.4.2023) சுக்லபட்சத்து திருதியை திதி, கார்த்திகை நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம், தைதுலம் நாமகரணம், ஜூவன் நிறைந்த அமிர்த யோகத்தில் குருபகவான் மீனத்திலிருந்து மேஷம் ராசிக்குள் இரவு 11மணி 26நிமிடத்திற்கு பெயர்ச்சியானார்.

காலபுருஷ தத்துவப்படி குருபகவான் முதல் ராசியான மேஷ ராசியில் நுழைவதால் சொத்து மதிப்பு உயரும். வீட்டு மனை, விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் அவசரப்பட்டு விற்பனை செய்ய வேண்டாம். ரியல் எஸ்டேட் தொழில் அதிக லாபம் தரும்.

குருபகவான்

குருபகவான் துலாம் ராசியைப் பார்ப்பதால் நீதிபதிகளின் கை ஓங்கும். சட்டங்கள் கடுமையாகும். சாதாரண பாட்டாளி மக்களின் பக்கம் நீதித்துறை திரும்பி நியாயத்தைத் தரும்.

வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். சுய தொழில் தொடங்குவோர் அதிகரிப்பர். இந்திய வியாபாரிகள் உலகளவில் அதிக தனம் ஈட்டுவார்கள். தானியங்களை பதுக்குபவர்கள் பிடிபடுவார்கள். சில தானியங்கள் மற்றும் தங்கத்தின் விலை உயரும்.

மருத்துவத்துறை நவீனமாகும். மருந்து உற்பத்தி அதிகரிக்கும். சில மருந்துகளின் விலை உயரும். காலாவதியான மருந்துகள் கண்டுபிடித்து அழிக்கப்படும். ஆட்சியில் இருப்பவர்களின் கை ஓங்கும். இதய நோய் மற்றும் புற்று நோயை குணப்படுத்தப் புதிய மருந்துகள் கண்டறியப்படும். இந்தியாவில் அடிப்படைக் கட்டமைப்புகள், சாலை வசதிகள் மற்றும் இன்டர்நெட் – வைபை வசதிகள் அதிகரிக்கும்.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்புத் தொகை அதிகரிக்கும். உலகளவில் இந்தியாவில் பணமதிப்பு உயரும். மக்கள் மத்தியில் சேமிக்கும் குணம் ஆரம்பமாகும். மாணவர்களின் நினைவாற்றல் அதிகமாகும். இயற்கையான ரத்தங்கள் போல செயற்கை ரத்தங்களும் உருவாக்கப்படும்.

22.4.2023 முதல் 30.10.2023 வரை குருபகவான் ராகுவுடன் நிற்பதால் ஆங்காங்கே வகுப்பு கலவரங்களும், தொற்று பாதிப்புகளும் அதிகமாகும். விமான விபத்துகள், மின் விபத்துகள் அதிகரிக்கும். நிலநடுக்கங்களும் இருக்கும்.

கே.பி.வித்யாதரன்

நவம்பர் மாதம் முதல் மக்கள் மத்தியில் மகிழச்சி உண்டு, பொருளாதார நெருக்கடி குறையும். ரசாயன உற்பத்தி பெருகும். புது வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் மக்கள் மத்தியில் மகிழச்சியையும் தைரியத்தையும் தருவதாக இருக்கும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.