திருப்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த பிருத்விராஜ்(40), என்பவர் குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பிரித்விராஜ் அதே பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அறிந்து சிறுமியின் பெற்றோர், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையறிந்த பிருத்விராஜ் தலைமறைவானார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், தலைமறைவாக இருந்த பிரித்விராஜ் கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.