மது விருந்துக்கு அனுமதி: இளைஞர்களை போதை பழக்கத்தில் வைப்பதுதான் திராவிட மாடலா? டிடிவி தினகரன் கேள்வி

சென்னை: திருமண மண்டபங்கள், வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் சிறப்பு அனுமதி பெற்று மதுபான விருந்து அளிக்க வகை செய்யும் சட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981, என்ற சட்டத்தில் திருத்தம் செய்து, திருமண மண்டபங்கள், அரங்கங்கள், வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறிக் கொள்ள வகை செய்யும் அனுமதியை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது

ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் மூடப்படும் என்று தேர்தல் பரப்புரையின்போது திமுக அளித்த வாக்குறுதிக்கு மாறாக, அனைத்து வீடுகளிலும் மதுவைப் பயன்படுத்தும் வகையில் அறிவித்து மது விற்பனையை விஸ்தரித்திருப்பது இதுவரை போதைக்கு அடிமை ஆகாதவர்களையும் குறி வைத்து சமூக மது பழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை விடியா அரசு மேற்கொண்டுள்ளதா?

தமிழ்நாட்டில் ஏற்கனவே சிறுவர்கள், இளைஞர்கள் போதை வஸ்துக்களின் தாராளப் புழக்கத்தினால் அதற்கு அடிமையாகி பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது, போதையில் வாகனத்தை இயக்கி பொதுமக்களின் உயிருக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற செயல்கள் அதிகமாகி வரும் சூழலில் இந்தச் சிறப்பு அனுமதி கூடுதலாக பல உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கும், பல குடும்பங்களை சீரழிவிற்கு உள்ளாக்குவதற்குமான முயற்சியே!

TTV Dinakaran condemns for amendment in Tamilnadu liquor rules

இந்த சிறப்பு அனுமதி மூலம் இளைஞர்களின் சந்ததியையே போதை பழக்கத்திலேயே வைத்திருந்து சிந்திக்கவிடாமல் செய்வதுதான் திராவிடமாடல் ஆட்சியா? எனவே, இந்த சிறப்பு மது அனுமதி அரசாணையை வாபஸ் பெற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் பொதுமக்களைத் திரட்டி அமமுக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கின்றேன். இவ்வாறு டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

திருமண மண்டபங்களில் மது விருந்துக்கு அனுமதி கொடுத்தால் அங்கு வரும் குழந்தைகளுக்கு இது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும். வருங்கால எதிர்காலத்தை நாமே சீரழிப்பது போன்றதாகும் என அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் வீட்டுக்குள்ளேயே இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்பதும் சமூக சீர்கேட்டுக்கு வித்திடும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

TTV Dinakaran condemns for amendment in Tamilnadu liquor rules

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதை நீர்த்து போக செய்யும் வகையில் தமிழக அரசு புதிய மதுபான சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.