Sarath Babu: நடிகர் சரத்பாபுவுக்கு ஆச்சு.? மருத்துவமனையில் அனுமதி: கவலையில் ரசிகர்கள்.!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் ஏராளமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சரத்பாபு. தமிழில் ரஜினியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 71 வயதான சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
தமிழ், தெலுங்கு மொழிகளை தாண்டி கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏறக்குறைய 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார் சரத்பாபு. ரஜினியுடன் இவர் இணைந்து நடித்துள்ள முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவை. கமலுடன் ‘சலங்கை ஒலி’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழில் சரத்பாபு கடைசியாக பாபு சிம்ஹா நடிப்பில் வெளியான ‘வசந்தமுல்லை’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. கடந்த 20 ஆம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வைத்தார்.

KH 234: நயன்தாராவை தொடர்ந்து ஆண்டவருடன் இணையும் பிரபல நடிகை: பரபரக்கும் கோலிவுட்.!

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி சரத்பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகள் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அவர் விரைவில் பரிபூரண குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் கவலையுடன் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

Yaathisai Review: பொன்னியின் செல்வனுக்கு ஈடு கொடுத்ததா.?: ‘யாத்திசை’ படத்தின் முழு விமர்சனம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.