சிக்கன் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும்.
அதிலும் அதை கறி வைத்து சாப்பிடுவது என்றால் பிரியர்கள் அதிகம் தான்.
ஆகவே தினமும் செய்து சாப்பிடுவது போலின்றி இனி வித்தியாசமாக எப்படி செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
கோழி இறைச்சி – 01 கிலோ
- சின்ன வெங்காயம் – 30
- தக்காளி – 04
- பச்சை மிளகாய் – 02
- இஞ்சி பூண்டு விழுது – 02
- உருளைக்கிழங்கு – 01
- உப்பு
- கறிவேப்பிலை
- தேங்காய் எண்ணெய்
தாளிப்பதற்கு
- சோம்பு – 2 தே.கரண்டி
- சீரகம் – 1 தே.கரண்டி
- பிரியாணி இலை – 1
- ஏலக்காய் – 5
- கிராம்பு – 5
- பட்டை – 1
வறுத்து அரைப்பதற்கு
-
வரமிளகாய் – 10-12
- மல்லி விதைகள் – 4 தே.கரண்டி
- சீரகம் – 2 தே.கரண்டி
- மிளகு – 2 தே.கரண்டி
- கறிவேப்பிலை
அரைப்பதற்கு
-
துருவிய தேங்காய் – 1 கப்
- பொட்டுக்கடலை – 1 தே.கரண்டி
- சோம்பு – 1 தே.கரண்டி
செய்முறை
- தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை வெட்டிக் கொள்ள வேண்டும்.
-
ஒரு பாத்திரத்தில் வறுப்பதற்கான பொருட்களைக் கொண்டு வறுத்தெடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
பின்னர் தேங்காய், சோம்பு மற்றும் பொட்டுக்கடலை சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
-
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
-
பிறகு தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சிக்கனை கழுவிப் போட்டு, 5-6 நிமிடம் சிக்கனை வதக்கி எடுக்க வேண்டும்.
-
பின்னர் அதனுடன் அரைத்த மசாலா சேர்த்து அடுப்பில் வைத்து 2 விசில் விடும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
-
பின்னர் உருளைக்கிழங்கு மற்றும் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து அடுப்பில் வைத்து 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு தயார்.